துளசி மாட பூஜை..! Tulasi Pooja In Tamil..!

Advertisement

துளசி மாட பூஜை செய்வது எப்படி..! Tulasi Pooja Mantra In Tamil..!

Tulsi Pooja Procedure In Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய துளசி மாடத்தின்(Tulasi Pooja) சிறப்புகளை பற்றி இன்று நாம் பார்க்க போகிறோம். துளசியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் அனைவரின் வீட்டிலும் இந்த துளசி மாட பூஜை தாராளமாய் வைக்கலாம். சரி இப்போது துளசி மாடத்தின் பூஜை முறையை பற்றி படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!

துளசி மாட வழிபாடு:

வீடு என்றாலே துளசி மாடம் வைத்து வழிபடுவது மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ஒன்றாகும். அந்த காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் எல்லாரும் நமக்கு கற்று கொடுத்த வாழ்க்கை பாடம் என்னவென்றால் காலையில் எழுந்த உடன் முதலில் நாம் குளித்துவிட்ட பின்னர் வணங்க வேண்டியது வீட்டில் அமைந்துள்ள துளசி மாட பூஜை அறை தான்.

துளசி மாடத்தை வழிபடும் முறை:

துளசி மாடத்தின் கீழே இருக்கும் பகுதியில் விளக்கு ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நாம் உத்திராணியில் தண்ணீர் அதாவது துளசி மாட பூஜைக்கு தேவையான அனைத்து வித பொருள்களையும் எடுத்து போகும் போது கையில் ஒரு விளக்கு, அடுத்து ஊது பத்தி, சாம்பிராணி போன்றவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சாம்பிராணி போட இயலாதவர்கள் இப்போது கடைகளில் விற்கக்கூடிய கம்ப்யூட்டர் சாம்பிராணியை கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

newகுலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?

துளசி மாட பூஜைக்கு வைக்கும் பொருள்கள்:

துளசி மாடத்தின் பூஜைக்கு பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அடுத்ததாக பூஜைக்கு செய்யும் பூஜை மணி, அதன் பிறகு கற்கண்டு, இல்லையென்றால் திராட்சை பழ வகைகளை பூஜைக்கு வைத்து கொள்ளவும்.

துளசி மாட அமைவிடத்தின் பூஜை:

இந்த பூஜை பொருள்களை துளசி மாட பூஜை வீட்டிற்கு வெளியில் மாடத்தை வைத்திருந்தால் வெளியில் சென்று பூஜை செய்யவும். அதாவது இந்த துளசி மாடம் எங்கு உங்களின் வீட்டில் வைத்திருக்கிறீர்களோ அங்கு சென்று மாடத்தின் கீழ் விளக்கு ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.

விளக்கு ஏற்றிய பிறகு துளசி மாடத்திற்கு சூடம் ஏற்றி பத்தி, சாம்பிராணி போன்றவை காட்ட வேண்டும். சாம்பிராணி காட்டிய பிறகு பஞ்ச பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரை நெய்வேதனம் செய்த பிறகு மீதமுள்ள தண்ணீரை எல்லாவற்றையும் அந்த துளசி மாடத்திற்கு ஊற்ற வேண்டும்.

காலையில் தினமும் இந்த துளசி மாட பூஜைகளை செய்த பின்னர் வழக்கம் போல் அனைவரும் செய்யும் பூஜை சாஸ்திரங்களை உங்கள் பூஜை அறையில் செய்து கொள்ளலாம். இது போன்று துளசி மாட பூஜையை செய்து வந்தோம் என்றால் வீட்டில் துளசியின் அருள் நமக்கு கிடைக்கும்.

அதுமட்டும் இல்லாமல் மஹாலக்ஷ்மி மற்றும் நாராயணரின் அருள் வீட்டிற்கு கிடைக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   

Advertisement