உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கிறதா.! அப்போது இதை செய்யாதீர்கள்..!

valampuri sangu palangal in tamil

வீட்டில் வலம்புரி சங்கு வைத்திருந்தால்  செய்யக்கூடாத தவறுகள்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது மிகவும் பயனுள்ள ஒரு ஆன்மிக தகவல்தான். அது என்னவென்றால் வீட்டில் வலம்புரி சங்கு வைத்திருந்தால் செய்யக்கூடாத தவறுகளை பற்றித்தான். பொதுவாக நம்மில் பலரின் மகாலக்ஷ்மி வாழ்கின்ற வீட்டில் இந்த வலம்புரி சங்கு வைத்து வழிபடுவார்கள். வீட்டில் வலம்புரி சங்கை வைத்து வழிபடுவதால் பல தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிபட்ட இந்த வலம்புரி சங்கை வைத்து வழிபாடு செய்பவர்கள் செய்யக்கூடாத தவறுகளை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்திருந்தால் செய்யக்கூடாத தவறுகள்:

  • மிகவும் முக்கியமாக செய்யக்கூடாத தவறு என்னவென்றால் வலம்புரி சங்கை பூஜை அறையில் தரையில் வைக்கக்கூடாது. அதற்கு என ஒரு பூஜைத்தட்டில் அட்சதையை பரப்பி அதன் மேலே வலம்புரி சங்கை வைத்து வழிபடுவது நன்மையை தரும்.
  • அடுத்து வலம்புரி சங்கை எக்காரணம் கொண்டும் காலியாக வைக்கவேக்கூடாது. அதன் உள்ளே சிறிதளவு துளசியாவது போட்டு வைக்க வேண்டும்.
  • வீட்டில் உள்ள வலம்புரி சங்கின் மேலே எந்த ஒரு தூசியும் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இந்த வலம்புரி சங்கை வைத்து வழிபடுவதால் மஹாலக்ஷ்மியின் அருள் முழுதாக கிடைக்கும்.
  • வீட்டில் பூஜை அறையில் உள்ள வலம்புரி சங்கிற்கு தொடர்ந்து தினமும் பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் சங்கிற்கு என்று உள்ள மகத்துவம் குறைந்துவிடும்.

மேலே கூறியுள்ள தவறுகளை மட்டும் வீட்டு பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபடுபவர்கள் செய்துவிடாதீர்கள்.

வீட்டின் பூஜை அறையில் எவ்வாறு வலம்புரி சங்கை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் :

  • முதலில் வீட்டில் பூஜை அறையில் உள்ள வலம்புரி சங்கிற்கு தொடர்ந்து தினமும் பூஜை செய்ய  வேண்டும். அப்படி என்றால் பலவகையான பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை.
  • சாதாரணமாக நீரினால் வலம்புரி சங்கை சுத்தப்படுத்திவிட்டு அதன்மேலே அத்தர் என்ற நறுமண திரவியத்தை தடவி, அதற்கு மஞ்சள் குங்குமத்தினால் பொட்டுவைத்து வழிபாடு நடத்துவதால் வீட்டிற்கு மிகவும் நல்ல பலனை தரும்.
  • வலம்புரி சங்கினுள் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், மலர்கள் மற்றும் துளசியை வைத்து வழிபாடு செய்யலாம்.
  • இந்த வலம்புரி சங்கை வழிபடுவதற்கான சிறப்பு நாட்கள் என்னவென்றால்  மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினம், வாரத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற நாட்கள் ஆகும்.

இதையும் பாருங்கள் => மறந்தும் கூட பூஜை அறையில் இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்