வராஹி அம்மன் மூல மந்திரம் | Varahi Moola Mantra in Tamil
Varahi Mantra in Tamil/ வராகி அம்மன் மந்திரம்: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் வராகி அம்மனை வழிபடுவதால் என்னென்ன நன்மை நமக்கு கிடைக்கும் என்று இந்த பதிவு மூலமாக தெரிந்துக்கொள்ளுவோம். பன்றியின் முகத்துடன் சிங்க வாகனத்தில் காட்சி அளிப்பவள் வராகி அம்மன். வராஹி அம்மனின் மூல மந்திரத்தினை சொல்வதன் மூலம் எதிரிகளுடைய தொல்லைகள், எதிர்வினைகள் போன்ற அனைத்து தொல்லைகளிலிருந்தும் விடுபடலாம். சப்த கன்னிகளில் ஒருவரான வராஹி அம்மனின் சிறப்புகளையும், வழிபாடு முறைகளையும் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
![]() |
வராகி அம்மன் தோற்றம்:
வராஹி அம்மன் நான்கு கைகளை கொண்டு பன்றியின் முகத்தினை கொண்டு அருள் தருபவள். வராகி அம்மன் திருமாலுடைய வரமாக அவதார அம்சமாக காட்சியளிக்கிறாள்.
ஆலயங்களில் சன்னதிகளில் தனியாக கருப்பு நிற ஆடை அணிந்து`சிம்ம வாகனத்தில் காட்சி அளிப்பாள். இவரின் ஆறு கரங்களில் வரத, அபயஹஸ்தத்துடன் உள்ளார். மற்ற கைகளில் சூலத்துடனும், கபால, உலக்கை, நாகத்தினை பிடித்தவாறு இருப்பாள்.
வராகியின் சப்த கன்னிகள்:
பிராம்மி அம்மன், மகேசுவரி அம்மன், கௌமாரி அம்மன், நாராயணி அம்மன், வராகி அம்மன், இந்திராணி அம்மன், சாமுண்டி அம்மன் ஆவர்.
வராஹி அம்மன் வழிபாடு:
நம்முடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் நாம் செய்யும் செயல்களாலே ஏற்படுகிறது. இதனால் பல எதிரிகளின் தொல்லையினால் சிரமப்படுவார்கள். எதிரியின் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் வராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எதிரிகளை அழிப்பதற்கு வராஹி அம்மன் ருத்ர அவதாரம் எடுப்பாள். எதிரியின் தொல்லை நீங்குவதற்கு வராஹி அம்மனின் மூல மந்திரத்தை 26 நாட்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வராகி அம்மனுடைய மொத்த அருளும் உங்களுக்கு கிடைக்கும்.
![]() |
வராஹி அம்மன் மூல மந்திரம்:
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா
பூஜை அறை வழிபாட்டு முறை:
வராஹி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சை பருப்பை நன்றாக வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய் கலந்து நைவேத்தியமாக படைத்து வராகி அம்மனை வழிபாடு செய்து வர வேண்டும்.
இந்த வழிபாட்டினை தினமும் செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும், அதோடு தன வசியம் பெருகும். தொழில் விருத்தி அடைந்து நல்ல செழிப்பாக இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |