நமக்கு பல விதத்திலும் நன்மைகள் தரக்கூடியது வசம்பு. எல்லா நல்லதையும் வசியம் செய்யக்கூடிய சக்தி இந்த வசம்புக்கு உண்டு. வசம்பை வைத்து வசியம் செய்யக்கூடிய நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எந்த பரிகாரம் ஆனாலும் அதை முழு மனதுடன் இறைவனை வேண்டி செய்தால் நிச்சயம் நாம் வேண்டிகொள்வது நடக்கும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் வசம்பை வைத்து செய்ய கூடிய பரிகாரத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.
பணம் ஈர்க்கும் வசம்பு மை:
பெயர் சொல்லாதது என்று கூட சில பேர் இந்த வசம்பை சொல்லுவார்கள். இந்த வசம்பை நீங்கள் பணம் வைத்திருக்கும் பர்சில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் திரும்பவும் உங்களுக்கு பணம் கிடைப்பதற்கு உதவியாக இருக்கும்.
பூஜை அறையில் வசம்பை வைத்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகும். காலையில் குளித்தவுடன் சிறிது பசு நெய்யில் தீபம் ஏற்றி வசம்பை சிறிது நேரம் காட்டவும். பின் உங்களின் மோதிர விரலில் தீபத்தில் காட்டிய வசம்பின் பகுதியை தொட்டால் கையில் கருப்பு நிற மை ஒட்டும்.
பின் அதை உங்களின் உச்சந்தலை மற்றும் நெற்றியில் வைத்தால் நீங்கள் எந்த சுப காரியங்கள் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்குவதற்கு முன்னர் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
வசம்பை தீபத்தில் சுட்டு சாம்பலாக்கி கொள்ளவும். பின் அந்த சாம்பலை ஒரு வெள்ளை நிற துணியில் போட்டு கொள்ளவும். அதனுடன் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, கல் உப்பு இவற்றை சேர்த்து மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானை வேண்டி கொண்டு பச்சை நிற நூலால் கட்டி கொள்ளவும்.
இதை நீங்கள் எந்த இடத்தில் வைத்தீர்கள் என்றாலும் அதன் பலன் பன்மடங்கு கிடைக்கும். உதாரணத்திற்கு இதை பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் பணம் பெறுகும், புத்தகம் இருக்கும் இடத்தில் வைத்தால் குழந்தைகள் நன்கு படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
வருடத்திற்கு ஒரு முறை இந்த வசம்பு மூட்டையை மாற்றி கொள்ளுங்கள்.
வசம்பு பரிகாரம்:
பணத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு முன்பு வசம்பை கையில் தொட்டு விட்டு வசம்பை தொட்ட கையால் கொடுக்க வேண்டும். கொடுக்கும்போது நான் இப்போது கொடுக்கும் பணம் வேறு விதத்தில் எண்ணை வந்தடைய வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள்.
நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நீங்களும் பணக்காரர் ஆகலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.