மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் | West Facing House Vastu in Tamil

Advertisement

மேற்கு பார்த்த வீடு வாஸ்து பிளான் | Vastu For West Facing House in Tamil

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு கட்டிடம் கட்டுவதற்குறிய முறைகளையும் அதன் அம்சங்களையும் விளக்குவதாகும். வாஸ்து சாஸ்திரப்படி கிழக்கு மற்றும் வடக்கு திசையை நோக்கிய வீடுகளைத்தான் மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். மேற்கு நோக்கிய வீடுகள் நன்மைகளை கொடுப்பதில்லை என்று பலரும் நினைக்கின்றனர்.  இது தவறான கருத்து, மேற்கு நோக்கி முறையான வாஸ்துப்படி கட்டப்படும் வீடுகள் சகல செளபாக்கியத்தை அள்ளித் தரும் என்கிறார்கள். வாங்க இந்த பதிவில் மேற்கு பார்த்த வீடு சாஸ்திரம் பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
வாஸ்து படி பூஜை அறை, படுக்கையறை, குளியல் அறை, சமையல் அறைகளுக்கான அளவுகள்..!

வாஸ்து சாஸ்திரப்படி எது நல்லது?

வாஸ்து சாஸ்திரம் படி ஒரு வீட்டை அமைக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு திசை மட்டும் தான் நல்லது என்று எந்த கருத்தும் இல்லை. நான்கு திசைகளும் நன்மையளிக்கக் கூடியது என்று தான் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

மேற்கு திசை வாஸ்து பலன்:

மேற்கு திசையை பார்த்த வீடுகளில் வசிப்பவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

உலோகங்களில் “இரும்பு” மீது அதிக விருப்பத்தினை ஆதிபத்தியம் நிறைந்தவர் சனி பகவான்.

மேற்கு திசையை பார்த்தப்படி இருக்கின்ற வீடுகளில் வசிப்பவர்கள் இரும்பு வியாபாரம், இரும்பு பொருட்கள் தயாரிப்பு, பாத்திரக்கடை, வாகன தொழில் போன்ற தொழில்களில் அவர்களுக்கு மிகுந்த நன்மையைஏற்படுத்தி நல்ல பலனை கொடுக்கும்.

வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

ஆன்மீகத்தில் சனி பகவானின் ராசிகளான மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மேற்கு திசையில் தலைவாயில் இருக்கும் வீடுகளில் வசிப்பது, மேற்கு திசை உள்ள தலைவாயில் வைத்து சொந்தமாக வீடு கட்டி குடி போவது இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட ஆயுளும், வீட்டில் நிறைந்த செல்வமும் கிடைக்கும்.

 மேற்கு பார்த்த வீடு வாஸ்து பிளான்:

வடமேற்கு மூலையில் இருந்து தென்மேற்கு மூலையை நோக்கி வீட்டினுடைய மொத்த நீளத்தினையும் 9 பாகமாக பிரிக்கவும். இதைத்தான் ஆன்மீகத்தில் பாதம் என்று அழைக்கிறார்கள்.

வடமேற்கு பாதம் முதல் ஒன்றாகவும், தென்மேற்கு பாதம் ஒன்பதாவதாக இருக்க வேண்டும். பொதுவாக மேற்கு நோக்கிய வீட்டுக்கு 1 அல்லது 2 வது பாதங்களை கூட நுழைவுவாயிலாக பயன்படுத்தி கொள்ளலாம்.

தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

இப்படி அமைப்பதன் மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. நடுத்தரமான நன்மைகளுடன் வீடு அமையும். 7,8 மற்றும் 9 ஆம் பாதங்களில் வீட்டின் நுழைவுவாயிலை வைக்கக் கூடாது. மற்ற படி எல்லா வாஸ்து விதிகளும் மேற்கு நோக்கிய வீட்டிற்கும் பொருந்தும்.

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement