உங்களுக்கு கஷ்டம் வராமல் இருக்க இந்த பொருட்களை தானமாக கொடுக்காதீர்கள்

Advertisement

தானம் கொடுக்க கூடாத பொருட்கள்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் தானம் கொடுக்க கூடாத பொருட்களை பற்றி தெரிந்துகொள்வோம். தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள். முடியாதவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்கிறோம். ஆனால்  அதில் எந்த மாதிரியான  உதவிகளை செய்ய வேண்டும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. நாம் இன்னொருவருக்கு எதாவதொரு தானம் வழங்குவதால் பாவம் நீங்கும். சில பொருட்களை தானமாக கொடுப்பதால் நமக்கு கஷ்டம் ஏற்படும். அது என்னென்ன பொருட்கள் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள்⇒ கல்யாணம் ஆனா பெண்கள் புகுந்த வீட்டிற்கு இந்த பொருட்களை எடுத்து வராதீர்கள்

துடைப்பம்:

துடைப்பத்தை தானமாக கொடுக்க கூடாது. துடைப்பத்தை மற்றவர்களுக்கு கொடுத்தால் உங்கள் வீட்டின் செல்வத்தை அவர்களுக்கும் கொடுப்பதாம். அதுமட்டுமில்ல்லாமல் பணம் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

கிழிந்த துணிகளை:

நாம் துணிகளை தானமாக கொடுப்போம். ஆனால் அந்த துணி கிழிந்த துணிகளாக இருக்க கூடாது. கிழிந்த துணிகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது. அது போல் உடைந்த பொருள்களையும் தானமாக கொடுக்க கூடாது.

பொருட்கள் எல்லாம்:

நம் வீட்டில் உள்ள பொருளான கத்தரிக்கோல், கத்தி, ஊசி போன்றவற்றை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது. இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.

சில்லறை காசு:

கோவில்கள், பேருந்து நிலையம் போன்றவற்றில் பிச்சை எடுப்பார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்த காசுகளை கொடுப்போம். அந்த மாதிரி காசுகளை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. இவர்களுக்கு காசு கொடுக்காமல் உணவு, பழம், டீ, காப்பி, ஜூஸ், தண்ணீர் இந்த மாதிரி வாங்கி கொடுக்கலாம்.

தானத்தில் சிறந்த தானமான அன்னதானத்தை வழங்குவதால் புண்ணியம் கிடைக்கும்.

உணவில் கெட்டு போன பொருட்களை தானமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் செலவுகள் அதிகமாக ஏற்படும்.

பசியில் உள்ளவர்களுக்கு உணவை தந்தால் அவர்களுடைய வாய் வாழ்த்துகிறதோ இல்லையோ வயிறு வாழ்த்தும். அன்னதானம் வழங்குவதால் நம் தலைமுறையினரே சிறப்பாக வாழ வைக்கும். முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

திருமண நாள், பிறந்த நாள், பெரிய பண்டிகை சமயங்களில் தேவையற்ற செலவுகள் செய்வதற்கு அனாதை இல்லம், ஆதரவற்றோர் இல்லம் இல்லங்களுக்கு ஒரு வேலையாவது உணவை கொடுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement