அஷ்டமி அன்று இந்த தவறை செய்து விடாதீர்கள்..! அதேபோல் இதை செய்தால் நன்மை உண்டாகும்..!

Things Not To do On Ashtami in Tamil

அஷ்டமி அன்று செய்ய கூடாதவை | Things Not To do On Ashtami in Tamil

ஆன்மீக ரீதியாக நிறைய விஷயங்களை பார்த்து தெரிந்துகொண்டு வருகிறோம். இருந்தாலும் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் உடனே வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வது அஷ்டமி, நவமியா என்று பார்த்து அதன் பின் விசேஷத்தை செய்யலாம் என்று சொல்வார்கள்.

அதிலும்  சிலர் சொல்வார்கள் வளர்பிறையில் வரும் அஷ்டமியில் செய்யலாம். தேய்பிறையில் தான் செய்ய கூடாது என்று.. இது அனைத்திற்கும் பதிலாக தான் இந்த பதிவு இருக்கும். அஷ்டமியில் என்ன தான் செய்யக்கூடாது என்ன தான் செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

அஷ்டமி அன்று செய்ய கூடாதவை:

அஷ்டமியில் எந்த செயலை செய்ய நினைத்தாலும்  அதனை செய்ய தொடங்கினாலும் அது முழுமையடையாமல் போய்விடும். அது எவ்வளவு செய்தாலும் அது அவ்வளவு சீக்கிரத்தில் முடிவடையாது. ஆகவே அஷ்டமியில் எந்த ஒரு சுபகாரியங்களை செய்யமாட்டார்கள்.

சுபகாரியங்களை செய்ய மறுத்தாலும் இறைவனை வழிபடுவது மிகவும் உகந்த நாளாக இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அஷ்டமி திதியில் இறைவனை வழிபட்டால் நன்மை கிடைக்கும்.

அஷ்டமி நாளில் என்ன செய்யலாம்?

அஷ்டமி அன்று இறைவனை வழிபடுவதற்கு உகந்த நாளாக இருக்கும். அதிலும் சிறப்பு தேய்பிறையில் வரும் அஷ்டமியில் பைரவரை வணங்கினால் சகல செலவங்களையும் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அனைத்தையும் முறியடித்து நல்ல வழியை காட்டுவார். அஷ்டமியில் எந்த ஒரு விசேஷங்களையும் செய்யாமல் இறைவனை வழிபடுவது மனதிற்கும் வாழ்விற்கும் அமைதி அளிக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கால பைரவர் மந்திரம்

தேய்பிறை அஷ்டமி நாளில் என்ன செய்யலாம்?

தேய்பிறை அஷ்டமியில் பித்துருக்களுக்கு தர்ப்பணம், மேலும் அன்னதானம் செய்தால் குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 what not to do on ashtami in tamil

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும். அதாவது வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்தது தான் பஞ்ச தீப எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய்களை 5 விளக்குகளால் அல்லது 5 முகம் கொண்ட விளக்குகளை ஏற்றி 5 எண்ணெய்களை ஊற்றியும் விளக்குகளை ஏற்றி வழிபடலாம்.

இப்படி செய்வதால் உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும், நீங்கள் யாருக்கு பணம் கொடுக்கவேண்டுமோ அதனையும் கொடுக்க முடியும். எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் உடனே கொடுக்க முடியும்.

எந்த திதியில் என்ன செய்யலாம்

 

வயதானவர்கள் உடல் ரீதியாக உபாதைகள் இருந்தால் அது அவர்களின் உடை நிலை சீராகும்.

சனியின் தாக்கம் குறைக்கவாக இருக்கும். வேலைபார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படும்.

தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 திதிகளும் அவற்றின் பலன்களும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்