Which Zodiac Signs Lucky in Sun Transit and Saturn Transit in Tamil
மனிதனாக பிறந்த அனைவரின் வாழ்க்கையிலும் இந்த நவகிரகங்களின் தாக்கம் என்பது மிகுந்த பங்கு வகிக்கின்றது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அப்படி உள்ள நவகிரகங்கள் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தங்களின் ராசிகளை மாற்றி கொள்கின்றன இதனை பெயர்ச்சி என்பார்கள். ஜூன் 15-ம் தேதி சூரியன் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதே போல் தான் ஜூன் 17ம் தேதி சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார். இவ்விரண்டு பெயர்ச்சிகளின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதிலும் குறிப்பாக ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அநேக நல்லது நடக்கும். ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படும். இன்றைய பதிவில் இந்த சூரியன் மற்றும் சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சூரியன் மற்றும் சனி பெயர்ச்சியால் ராஜ யோகத்தை அடையப்போகும் 4 ராசிக்காரர்கள்:
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சூரியன் மற்றும் சனி பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகள் கிடைக்க போகின்றது. அதாவது உங்களுக்கு அதிக அளவு அதிர்ஷ்டம் கிடைக்கும். அதாவது நீங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் அதிக அளவு முன்னேற்றம் மற்றும் லாபம் கிடைக்கும்.
இதனால் உங்களின் பொருளாதார நிலைமை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் வேலை இல்லாமல் உள்ளவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்:
மிதுன ராசியில் தான் சூரியன் பெயர்ச்சி அடைய உள்ளார். மேலும் மிதுன ராசியின் 8-வது வீட்டில் தான் சனி பகவான் பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த இரண்டு பெயர்ச்சியும் மிதுன ராசிக்காரர்களுக்கு பல எதிர்பார்க்காத நன்மைகளை அளிக்க போகின்றது.
அதாவது இந்த மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க போகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதேபோல் போல் புதிய தொழில் தொடங்கினாலும் அதிக அளவு முன்னேற்றம் ஏற்படும். இதனால் உங்களின் பொருளாதார நிலைமை உயரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு பெயர்ச்சியாலும் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் அனைவரின் ஆதரவும் கிடைக்கும்.
உங்களை சுற்றியுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும். திடீரென பணவரவு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் நிம்மதி நிலவும். அதே போல் குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.
நீங்கள் மனதில் நினைத்துள்ள அனைத்து காரியங்களும் உடனடியாக நடப்பதற்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும்
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு நிகழவிருக்கும் சூரியன் மற்றும் சனி சஞ்சாரத்தால், எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த கால கட்டத்தில் பொருளாதாரம், நிதி நிலை சற்று வலுவாக தான் இருக்கும். மேலும் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதே போல் குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரம் நன்கு முன்னேற்றம் அடையும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |