ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை, சாப்பிட கூடாதவை

Advertisement

வீசிங் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் | ஆஸ்துமா உள்ளவர்கள் என்ன சாப்பிட கூடாது

ஆஸ்துமா அல்லது மூச்சு திணறல் வருவதற்கான முக்கிய காரணம் சுற்றுசூழலில் உருவாகும் தூசு, புகை, புகைப்பிடித்தல், தொழிற்சாலை கழிவுகள் போன்ற மாசு நிறைந்த காற்றை நாம் சுவாசிப்பதனால் வரும். இது போன்ற காற்றை நாம் சுவாசிப்பதால் மூச்சுக்குழல் தசைகளை சுருக்கிவிடுகின்றன அப்போது மூச்சு சிறுகுழல் அதிகமாக சுருங்கி உள்சவ்வு வீங்கி விடுகிறது. வீங்கிய மூச்சுக்குழலில் நீர் வெளியாகி சுருங்கிப்போன மூச்சப்பாதையை முற்றிலும் அடைத்துவிடுவதால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. சிலருக்கு பரம்பரை காரணமாக வரலாம். ஆஸ்துமா உள்ளவர்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.

ஆஸ்துமா குணமாக உணவு

Foods To Asthma in Tamil – கேரட்:

foods that trigger asthma in tamil

  • வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிக அளவு கேரட்டில் இருப்பதால் மூச்சுத்திணறல் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.

ஆஸ்துமா உணவு வகைகள் – குடைமிளகாய்:

ஆஸ்துமா உணவு வகைகள்

  • நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க சிவப்பு குடைமிளகாய் பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் உணவில் சிவப்பு குடைமிளகாய் சேர்த்துக்கொள்வது நல்லது.

Foods To  Asthma in Tamil – பாகற்காய்:

ஆஸ்துமா உணவு வகைகள்

  • மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பாகற்காய் ஜூஸ் குடிப்பது நல்லது. பாகற்காய் உடம்பில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் ஆஸ்துமாவை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.
மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

ஆஸ்துமா உணவு வகைகள் – விட்டமின் சி பழங்கள்:

foods that trigger asthma in tamil

  • நுரையீரல் வீக்கம் மற்றும் அழற்சியை குணப்படுத்துவதற்கு விட்டமின் சி அதிகம் உள்ள பழங்களான ஆரஞ்சு, கிவி, Strawberries போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. நுரையீரல் ஒவ்வாமையை குணப்படுத்துவதற்கு கொய்யா பழம் சிறந்தது.

ஆஸ்துமா குணமாக மெக்னீசியம் நிறைந்த உணவு:

ஆஸ்துமா குணமாக உணவு

  • சுவாச குழாயில் உள்ள சளியை நீக்குவதற்கு உணவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த மிளகாயை சேர்த்து கொள்வது நல்லது. நுரையீரல் மற்றும் சுவாசக்குழாயில் உள்ள ஒவ்வாமையை குணப்படுத்த அதிமதுரம் உதவுகிறது.
  • மெக்னீசியம் நிறைந்த உணவுகளான மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம்.
வீசிங் குணமாக சித்த மருத்துவம்

வீசிங் தவிர்க்க வேண்டிய உணவுகள்

வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொண்டீர்கள். அது போல வீசிங் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளும் இருக்கிறது. இதனை எடுத்து கொள்ளாமல் இருப்பதன் மூலம் உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தாமல் இருக்கலாம். ஆய் என்னென்ன உணவுகள் என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

Foods That Trigger Asthma in Tamil:

foods that trigger asthma in tamil

  • மூச்சு திணறல் உள்ளவர்கள் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது. பால் சம்மந்தமான பொருட்களை தவிர்க்க வேண்டும். பால் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்தும் மியூக்கஸ் எனும் திரவத்தை வெளியிடுவதால் இவை ஆஸ்துமாவை அதிகப்படுத்துகிறது. ஐஸ்கிரிம் மற்றும் கடையில் விற்கப்படும் குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். இது போல எடுத்து கொள்வதன் மூலம் உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும்.
  • ஆஸ்துமா உள்ளவர்கள் பால் குடிப்பதால் நெஞ்சடைப்பு, சளி, மூச்சு விடுவதில் சிரமம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆஸ்துமா உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா

  • முட்டை, கோதுமை, சோயா போன்ற உணவுகளில் நன்மை பயக்கக்கூடிய புரோட்டீன் இருந்தாலும் இவை ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஆஸ்துமா உள்ளவர்கள் இவற்றை தவிர்க்க வேண்டும்.
  • ஏனென்றால் முட்டை சில பேருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதனை உங்களின் ஆஸ்துமா பிரச்சனையை அதிகப்படுத்தலாம்.

Wheezing Avoid Foods in Tamil:

foods to avoid in asthma in tamil

  • வாழைப்பழம், பப்பாளி போன்ற பழங்கள் குளிர்ச்சி நிறைந்தவை என்பதால் இந்த வகையான பழங்களை தவிர்ப்பது நல்லது. இது மாதிரியான குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தலாம். அதனால் இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.
  • அரிசி, சர்க்கரை, காபி, தேநீர், சாஸ், மதுபானம் போன்ற எளிதில் செரிமானம் அடையாத உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Foods To Avoid Asthma in Tamil – மைதா உணவுகள்:

foods that trigger asthma in tamil

  • நட்ஸ், ஸ்னாக்ஸ் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மைதா உணவுகளான பரோட்டா, ரொட்டி போன்ற உணவுகளை ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிடுவதால் இவை மூச்சுத்திணறலை அதிகப்படுத்துகிறது.
  • மாமிச உணவுகள் மற்றும் வைட்டமின் டி நிறைந்த பால் சம்மந்தமான உணவுகளை உண்பதால் ஏதேனும் அழற்சி ஏற்படவில்லை என்றால் சாப்பிடலாம் இல்லையெனில் அழற்சி வந்தால் இது போன்ற உணவுகளை தவிர்க்கவும். ஆஸ்துமா உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

காரமான உணவுகள்:

காரமாகவும், மசாலா சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இவற்றை ஆஸ்துமா பிரச்சனை மற்றும் வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். அது போல வாசனை நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement