கிவி பழத்தின் மருத்துவ குணங்கள் | Kiwi Fruit Health Benefits in Tamil
இயற்கையாக விளைகின்ற ஒவ்வொரு பழங்களும் மனிதன் உண்ணக்கூடியதாகவே இருக்கின்றன. அவற்றில் ஒரு சில பழங்கள் மக்களிடம் பிரபலமானவை. அந்த வகையில் நாம் இந்த பதிவில் பிரபலமான கிவி பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். சீனாவில் வளர்கின்ற பெர்ரி வகை பழங்கள் தான் கிவி பழமாகும். இதற்கு சீனத்தின் நெல்லிக்காய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் ஏராளமான புரதச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் இதில் 9 வகையான சத்துக்கள் உள்ளன. அப்படி ஏராளமான நன்மைகள் கொண்ட இந்த பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
கிவி வகைகள்:
- பச்சை நிறம்
- தங்க நிறம்
- சிவப்பு நிறம்
பெரிய பழத்தை விட சிறிய பழத்தில் அதிக சத்து உள்ளது.
Kiwi Fruit Benefits in Tamil – இதயநோய் சரி செய்ய:
- இந்த பழத்தில் உள்ள தோலில் அதிக அளவு விட்டமின்ஸ், கனிமச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் இதய நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இதயத்துடிப்பை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
நாவல் பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..? |
கிவி பழம் நன்மைகள் – நோய் எதிர்ப்பு சக்தி:
- நம் உடம்பில் இருக்கும் செல் சிதைவு நோய்களுக்கு காரணமான Radicals வளர்ச்சியை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
Kiwi Fruit Health Benefits in Tamil – கண் பார்வை:
- kiwi fruit in tamil: இந்த பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் கண் பார்வை அதிகரிக்க உதவுகிறது. வயதானவர்களுக்கு வரும் கண்புரை, கண் பார்வை மங்குதல், விழித்திரை சிதைவு, கண் நோய்கள் மற்றும் அதிக நேரம் கணினியில் வேலை பார்ப்பதால் வரும் கண் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.
கிவி பழம் நன்மைகள் – மாரடைப்பை சரி செய்ய:
- ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஒன்றாக சேர்ந்து ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி இதயத்தில் ரத்தம் செல்லாமல் இருப்பதால் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பு உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்த கட்டிகள் உருவாகி Heart Attack வராமல் தடுக்க உதவுகிறது.
ஆப்ரிகாட் பழம் பயன்கள் |
Benefits of Kiwi Fruit in Tamil – நினைவாற்றல் அதிகரிக்க:
- போலிக் மற்றும் ஒமேகா 3 எனும் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் மூளை வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.
கிவி பழத்தின் நன்மைகள் – சர்க்கரை நோயை சரி செய்ய:
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். இந்த பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும் உடலில் சர்க்கரை அளவை சமமான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.
Kiwi Benefits in Tamil – உடல் எடை குறைய – கிவி பழம்:
- பருமனாக உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு இந்த பழத்தை சாப்பிடலாம். ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், பேரிக்காய் மற்றும் ஆப்பிளில் 32.8 கலோரிகளும் வாழைப்பழத்தில் 22.4 கலோரிகளும் மற்ற பழங்களில் 3.8 கலோரிகளும் உள்ளது. ஆனால் இந்த பழத்தில் மிக குறைவான அளவு கலோரி உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும்.
Kiwi Dry Fruit Benefits in Tamil – மலச்சிக்கலை சரிசெய்ய:
- இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.
Kiwi Health Benefits – ஆஸ்துமாவை குணப்படுத்த – கிவி பழம்:
- வைட்டமின் இ இந்த பழத்தில் இருப்பதால் சருமம் முதுமை அடையாமல் இருக்கவும் பெண்கள் சீக்கிரம் மகப்பேறு அடையவும் உதவுகிறது.
- நுரையீரல் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி இருப்பதால் இந்த பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
ஆப்ரிகாட் பழம் பயன்கள்..! Apricot Benefits in Tamil..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |