காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் | Oats Benefits in Tamil

Advertisement

ஓட்ஸ் மருத்துவ பயன்கள் | Oats Uses in Tamil

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு உணவு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால் மக்கள் எல்லோரும் சற்று அவசர வேலையில் இருப்பதால் பெரிதும் காலை உணவை எளிதாக மற்றும் சத்துள்ள உணவாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். விரைவாக மற்றும் சத்துள்ள உணவு வகையில் ஓட்ஸ் முதலிடம் பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த தானியத்தில் உடலுக்கு தேவையான பல விதமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. நாம் இந்த தொகுப்பில் ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம் வாங்க.

இதில் கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதை பெரும்பாலும் ஓட்ஸ் கஞ்சியாக எடுத்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை நோய்:

ஓட்ஸ் பயன்கள்

  • ஓட்ஸ் பயன்கள்: இதில் இருக்கும் நார்ச்சத்து உணவை மெதுவாக செரிமானம் அடைய செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீர் என்று உயராது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஓட்ஸ் எடுத்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. டைப் 2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தினமும் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது.

புற்றுநோய்:

Oats Uses in Tamil

  • Oats Uses in Tamil: புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை உட்கொள்வது போன்ற காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • ஓட்ஸில் இருக்கும் சத்துக்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

மலச்சிக்கல்:

Oats Health Benefits in Tamil

  • ஓட்ஸ் கஞ்சி பயன்கள்: செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஓட்ஸ் உதவி வருகிறது.
  • குடலில் உள்ள புண்கள், வயிற்றில் இருக்கும் நச்சுக்கள், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு இதில் இருக்கும் நார்ச்சத்து உதவுகிறது.
  • ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை வாரத்திற்கு ஒரு முறை எடுத்து கொள்வது நல்லது.

உடல் எடை குறைய:

Oats Benefits in Tamil

  • Oats Health Benefits in Tamil: உடல் பருமனாவதற்கு முக்கிய காரணம் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வது தான். இந்த கொழுப்புகளை கரைப்பதற்கு நாம் கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
  • ஓட்ஸில் கரையக்கூடிய நார்சத்து இருப்பதால் இவை உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

மாரடைப்பு சரி செய்ய:

Oats Benefits in Tamil

  • Oats Benefits in Tamil: உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால் இரத்த ஓட்ட பாதை தடைபடுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
  • இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருப்பதற்கு ஓட்ஸ் பயன்படுவதால் மாரடைப்பு நோய் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. மேலும் இது இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை சரி செய்கிறது.

மாதவிடாய் காலத்தில்:

Oats Benefits in Tamil Language

  • Oats Benefits in Tamil Language: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, தலைவலி, எரிச்சல் மற்றும் உதிரப்போக்கு காரணமாக உடல் பலவீனமாக இருக்கும்.
  • இந்த சூழலில் பெண்கள் ஓட்ஸை எடுத்து கொள்வது நல்லது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்க உதவுகிறது.
காலை பார்லி கஞ்சி குடிச்சி பாருங்க – உடலில் மாற்றம் உண்டாகும்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement