Orithal Thamarai Powder Uses
இவ்வுலகில் ஏராளமான மூலிகை செடிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கின்றன. அந்த வகையில் இந்த பதிவில் ஆண்களுக்கு பல பலன்களை அள்ளித்தரக்கூடிய ஓரிதழ் தாமரை மூலிகை செடியின் பயன்களை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த மூலிகை செடி ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வினை அளிக்கின்றது. பொதுவாக இந்த மூலிகை செடி நீரோட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் வயல்வெளிகளிலும், தோட்டங்களிலும் வளரக்கூடியது. இந்த செடியின் பூ, இலை, தண்டு, வேர், காய் என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக இழந்த ஆண்மையை மீட்டெடுக்கும் வல்லமை கொண்ட இது இந்தியாவின் வயாகரா என்ற பெயரை பெற்றுள்ளது. ஆண்களுக்கு எப்படி இது உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
** ஓரிதழ் தாமரை பொடி பயன்கள் **
ஓரிதழ் தாமரை பயன்கள்:-
ஓரிதழ் தாமரையின் இலையை பறித்து நன்கு சுத்தம் செய்து அதிகாலையில் வெறும் வாயில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல், ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் அதாவது இந்த மூலிகைச்செடியின் (வேர் முதல் பூ வரை) உண்டு வரலாம்.
உடலை தேற்ற:
ஏதேனும் ஒரு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலத்தை தேற்ற வேண்டும் என்று நினைத்தால் இந்த ஓரிதழ் தாமரை சமூலத்தை பயன்படுத்து கஷாயம் வைத்து சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.
விஷக்காய்ச்சல் குணமாக:
திடீரென ஏற்படும் விஷக்காய்ச்சலை குணப்படுத்த இந்த ஓரிதழ் தாமரை சமூலத்தை பயன்படுத்தி கஷாயம் வைத்து குடித்து வந்தால் விஷக்காய்ச்சலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். அதேபோல் ஆஸ்துமா நோயால் அவஸ்த்தைப் படுபவர்களும் இந்த கஷாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடையை குறைக்க:
பொதுவாக உடல் பருமன் அதிகமுள்ளவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலவகையான டிப்ஸினை ட்ரை செய்திருப்பார்கள் இருந்தாலும் எந்த ஒரு பலன்களும் கிடைத்திருக்காது. அதனால் மன உளைச்சல்களுக்கு ஆளாகுவார்கள். இனி கவலை அடையவேண்டாம். ஆம் உடல் எடையை குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்கள் இந்த ஓரிதழ் தாமரை சமூலத்தை கஷாயம் செய்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
இளமையாக இருக்க:
உணவு முறை, சமூக சூழல், பொருளாதாரம் காரணமாக சில இளைஞர்கள் இளம்வயதிலேயே முதியவர்கள் போல காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இதே ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் இளமையாக காட்சியளிக்கலாம்.
ஓரிதழ் தாமரை பயன்கள்:-
ஓரிதழ்தாமரை சமூலத்துடன் பச்சைக் கற்பூரம், கோரோஜனை (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் பசு நெய் சேர்த்து உடலில் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ஓரிதழ் தாமரை பயன்கள்:-
ஆண்மைக்குறைபாடு, குழந்தையின்மை பிரச்னை, தாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த ஓரிதழ் தாமரை சூரணம் சாப்பிட்டுவர நல்ல பலன் கிட்டும்.
சிறுநீர் பாதை புண் குணமாக:
ஒரிதழ் தாமரை இலை, கீழா நெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து எருமைத் தயிரில் 10 – 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீர்த் தாரையில் உள்ள புண்கள், வெள்ளைபடுதல் ஆகிய பிரச்சனைகள் குணமாகும். இருப்பினும் இந்த முறையை பின்பற்றும் போது காரமும், சூடும் இல்லாத உணவு சாப்பிட வேண்டும்.
ஆண்மை அதிகரிக்க:-
இலை, தண்டு, வேர், பூ, காய் என ஓரிதழ் தாமரையின் முழு சமூலத்தை அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாகும். சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன் மூலம் இழந்த ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும்.
உடலில் உள்ள கழிவுகள் வெளியேற:-
ஓரிதழ் தாமரை, தொழுகண்ணி, விஷ்ணுகிரந்தி, கீழாநெல்லி, மணதக்காளி கீரை, மகா வில்வம் ஆகிய மூலிகைகளை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து தனித்தனியாக பொடித்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனை காலை மாலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் பொடியை 15 கிராம் தேன் கலந்து அருந்த வேண்டும் அல்லது 100 மில்லி பாலில் 5 கிராம் பொடியை கலந்து அதனுடன் பனை கல்கண்டு சேர்த்து அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியற்றி சகல உறுப்புகளையும் அதாவது (வயிறு, கல்லீரல், கணையம், சிறுநீரகம், இனபெருக்க உறுப்புகள்) புதுபித்து நன்றாக இயங்க செய்யும். உடலில் உள்ள உறுப்புகளின் கெட்ட கழிவுகளை வெளியேற்றினாலே அதன் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |