கருஞ்சீரகம் தீமைகள் | Karunjeeragam Disadvantages in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நமது ஆரோக்கிய பதிவில் கருஞ்சீரகம் யாரெல்லாம் சாப்பிட கூடாது, அதை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே கருஞ்சீரகத்தை சாப்பிடுவதால் சில நன்மைகள் இருந்தாலும், இதை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலுக்கு சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திடுகிறது.
பொதுவாகவே மனிதர்கள் ஒரு பொருளை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலுக்கு பல பக்கவிளைவுகளை தருகிறது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப என்னதான் நமக்கு பிடித்த உணவாக இருந்தாலும் அதனை அளவோடு சாப்பிட வேண்டும். இல்லையென்றால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அந்தவகையில், கருஞ்சீரகத்தை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம் வாங்க.
ஆளிவிதை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா? |
கருஞ்சீரகம் யார் யார் சாப்பிட கூடாது:
- கருஞ்சீரகத்தினால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை, பலவகையான புற்றுநோய்களை குணப்படுத்த கருஞ்சீரகத்தில் இருந்து தான் மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் 97 சதவீதம் கருஞ்சீரகத்தில் நன்மைகள் இருந்து வந்தாலும் 3 சதவிதக்கு மேல் தீமைகளும் உள்ளன.
- கருஞ்சீரகத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது தொடர்ந்து எடுத்துக்கொண்டாலோ உடலுக்கு பல வியாதிகளையும் தருகிறது.
- கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது அதனுடைய வியாதியை பொறுத்து ஒரு மண்டலமோ அல்லது இரண்டு மண்டலமோ ஒரு சில நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது என்றும் கூறபடுகிறது.
- இந்த கருஞ்சீரகத்தை மாறாக வருட கணக்கிலே, மாத கணக்கிலோ மற்றும் ஆயில் முழுவதும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வருட கணக்கில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தி அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது.
- கருஞ்சீரகத்தை எக்காரணத்தை கொண்டும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட கூடாது. கருஞ்சீரகத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கும், கருப்பைக்கும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
- அதைபோல் குழந்தைப்பேறுக்காக காத்திருப்பவர்கள் கூட கருஞ்சீரகத்தை எக்காரணத்தை கொண்டும் சாப்பிட வேண்டாம். அதோடு பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்கள் கூட கருஞ்சீரகத்தை உபயோகிக்க வேண்டாம்.
கருஞ்சீரகம் ஹேர் டை 10 நிமிடத்தில் வெள்ளை முடி கருப்பாக மாறிடும்..! Result எப்படி இருக்கு ?
- பொதுவாகவே இந்த கருஞ்சீரகத்தை குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிடுவது வழக்கத்தில் இருந்து வந்தாலும், அதை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளை சந்திப்பது போல இருக்கும்.
- அதோடு குறைந்த இரத்த அழுத்தத்தை உடையவர்கள் இந்த கருஞ்சீரகத்தை அதிகமாக சாப்பிட கூடாது, ஏனென்றால் கருஞ்சீரகத்தில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை உள்ளது, இதனால் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறைந்து ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படவும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
- சர்க்கரை நோயாளிகள் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது, இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட கூடாது. ஒரு சிலர்க்கு மூக்கில் இருந்து இரத்தம் வடியும், அவர்கள் கருஞ்சீரகத்தை கட்டாயம் சாப்பிட கூடாது.
- சைட்டோகிரோம் p450 சப்ஸ்ட்ரேட் அல்லது இதற்கு நிகரான மருந்து சாப்பிடுபவர்கள் கட்டாயமாக கருஞ்சீரகத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |