சுளுக்கு குணமாக என்ன செய்வது? | Suluku Treatment in Tamil

 சுளுக்கு குணமாக | Muscle Sprain Treatment in Tamil

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் இந்த சுளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. சுளுக்கு பிரச்சனையானது அதிகமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, வெளியில் அதிகமாக விளையாடுபவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகிறது. சுழுக்குகளில் கழுத்து சுளுக்கு, கால் சுளுக்கு, முதுகு சுளுக்கு போன்ற 44 வகையான சுழுக்குகள் உள்ளன. நரம்புகளின் தசை நாறுகள் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்தால் அது சாதாரண சுளுக்கு. ஆனால் தசை நாறுகள் கிழிவது, நரம்புகள் பாதிக்கப்படுவது போன்றவை கடினமான சுளுக்கு ஆகும். நாம் இந்த பதிவில் சாதாரணமான சுழுக்குகள் ஏற்பட்டால் வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..

கழுத்து வலி குணமாக

டிப்ஸ்: 1

 suluku vaithiyam in tamil

சுளுக்கு பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு ஜாதிக்காய் மிகவும் உதவியாக இருக்கிறது. சுளுக்கு பிரச்சனை உள்ளவர்கள் ஜாதிக்காயை உடைத்து சிறிதளவு அதோடு பால் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்ததை இளஞ்சூடு வரும் வரை கொதிக்க வைத்து சுளுக்கு உள்ள இடத்தில் மெதுவாக தடவி பற்றுப்போடவும். ஒரு நாள் கழித்து பற்று போட்ட இடத்தினை வெந்நீரில் கழுவி மீண்டும் பற்று போடவும். இந்த முறையை தொடர்ந்து 3 நாட்கள் செய்து வர சுளுக்கு சரியாகிவிடும்.

டிப்ஸ்: 2

 சுளுக்கு கழுத்து வலி குணமாக

இரண்டாவது டிப்ஸாக சுளுக்கு குணமாக பூண்டு. பூண்டினை உரித்து எடுத்துக்கொள்ளவும். உரித்து வைத்துள்ள பூண்டோடு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டையும் நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும். இடித்து பொடியாக வைத்துள்ளதை சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டு வர சுளுக்கு குணமாகும்.

டிப்ஸ்: 3

 கழுத்து சுளுக்கு குணமாக

சுளுக்கு குணமாக பிரண்டையை நன்றாக பிழிந்து அதன் சாறினை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிரண்டை சாறுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு அதை இதமான சூட்டில் வைத்து சுளுக்கு ஏற்பட்டிருக்கும் இடங்களில் தடவி வர சுளுக்கு பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

இடுப்பு வலி முற்றிலும் நீங்க இதை மட்டும் சாப்பிடுங்கள் போதும்

டிப்ஸ்: 4

 சுளுக்கு குணமாக

முருங்கை பட்டையோடு சிறிது பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கினை சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்து வைத்துள்ளதை சூடுப்படுத்தி இதமான சூடு வந்ததும் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டுவர சுளுக்கு பிரச்சனை குணமாகும்.

டிப்ஸ்: 5

 சுளுக்கு வீக்கம் குறைய

கை பகுதியில் சுளுக்கு பிடித்திருப்பவர்கள் சிறிதளவு கற்பூரத்தையும், மிளகு தூளையும் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொதிக்க வைத்ததை ஒரு துணியில் நனைத்து கையில் எந்த இடங்களில் சுளுக்கு பிடித்திருக்கிறதோ அங்கு போட்டு வந்தால் சுளுக்கு விரைவில் குணமடையும்.

முதுகு வலி குணமாக பாட்டி வைத்தியம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil