தாளிசாதி சூரணம் பயன்கள் | Thalisathi Sooranam Uses in Tamil

Thalisathi Sooranam Uses in Tamil

தாளிசாதி சூரணம் நன்மைகள் | Thalisathi Suranam Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆரோக்கியம் பதிவில் தாளிசாதி சூரணம் பயன்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். இந்த சித்த மருந்தானது பொடியாகவும், மாத்திரையாகவும் கிடைக்கிறது. தாளிசாதி’ என்றால் ஏதோ விநோதமான பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். தாளிசபத்திரி என்பது இந்த மருந்தின் முக்கிய உட்பொருள். இது ஒரு காட்டு லவங்க மரத்தை சேர்ந்ததாகும். தாளிசபத்திரி அதிகம் இருப்பதால் இந்த மாத்திரைக்கு தாளிசாதி சூரணம் என்று பெயர் வந்தது. சரி வாங்க தாளிசாதி சூரணம் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது மற்றும் அதனை சாப்பிடும் முறை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம்.

திரிபலா சூரணம் பயன்கள்

தாளிசாதி சூரணம் பயன்கள்:

தாளிசாதி சூரணம் பயன்கள்

 1. சிலருக்கு நாள்பட்ட சளி, நுரையீரல் சளி பிரச்சனை, இருமல், ஆஸ்துமா போன்ற நோயால் அவதிப்படுபவர்களுக்கு தாளிசாதி சூரணம் ஒரு சிறந்த தீர்வு கொடுக்கிறது.
 2. மூச்சு திணறல் பிரச்சனை இருப்பவர்களால் நீண்ட நேரத்திற்கு நடக்கமுடியாமல் மூச்சு வாங்கும் நிலை ஏற்படும். இப்படி மூச்சு திணறல் பிரச்சனை இருப்பவர்கள் தாளிசாதி சூரணம் எடுத்துகொண்டால் மூசு திணறல் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 3.  ஒரு சிலருக்கு வேலை செய்யாமல் இருக்கும் நேரத்தில் கூட உடலானது எப்போதும் சோர்ந்த நிலையில் காணப்படும். உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க இந்த சூரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
 4. உடல் எப்போதும் ஆற்றல் நிறைந்தும் வலிமையுடனும் இருப்பதற்கு உடலில் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தாளிசாதி சூரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
 5. காது பகுதியில் ஏற்படும் இரைச்சல், மூக்கில் இருந்து நீர் வடிதல், தலை பாரம், நீர்க்கோவை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தாளிசாதி சூரணம் எடுத்து வந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்.
 6. அதிக காரம் சாப்பிடுவதால் வயிற்று பகுதியில் எரிச்சல் உண்டாகும். வயிற்று எரிச்சல் சரியாக தாளிசாதி சூரணத்தை சாப்பிட்டு வர நல்ல மாற்றம் கிடைக்கும்.
 7. பசி இல்லாத உணர்வு, அஜீரண கோளாறு, வயிற்றில் ஏற்படக்கூடிய புண், அல்சர் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி தாளிசாதி சூரணத்திற்கு உள்ளது.
 8. சிலருக்கு எந்த உணவு சாப்பிட்டாலும் வயிற்று வலி பிரச்சனை இருந்துக்கொண்டே இருக்கும். வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து இந்த சூரணத்தை எடுத்து வந்தால் வயிற்று வலியிலிருந்து தப்பிக்கலாம்.
 9. சளி, இருமல் போன்றவற்றால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும்.
 10. மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்கள் இந்த தாளிசாதி சூரணத்தை எடுத்துக்கொண்டால் மஞ்சள் காமாலை நோயை விரைவில் குணப்படுத்திவிடலாம்.
 11. மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனையை தடுத்து நிறுத்தும்.
ஆளி விதை பொடி சாப்பிடும் முறை

தாளிசாதி சூரணம் செய்முறை | Thalisathi Choornam Ingredients in Tamil:

 • தாளிசபத்திரி – 2 கிராம்
 • சன்ன லவங்கப்பட்டை – 2 கிராம்
 • ஏலம் – 2 கிராம்
 • சுக்கு – 2 கிராம்
 • அதிமதுரம் – 2 கிராம்
 • பெருங்காயம் – 2 கிராம்
 • நெல்லி வத்தல்- 2 கிராம்
 • கோஷ்டம் – 2 கிராம்
 • திப்பிலி – 2 கிராம்
 • சீரகம் – 2 கிராம்
 • சதகுப்பை – 2 கிராம்
 • கருஞ்சீரகம் – 2 கிராம்
 • கற்கடக சிருங்கி – 2 கிராம்
 • தான்றிக்காய் – 2 கிராம்
 • கடுக்காய் – 2 கிராம்
 • ஜடா மஞ்சள் – 2 கிராம்
 • மிளகு – 2 கிராம்
 • சிறுநாகப்பூ – 2 கிராம்
 • செண்பகப்பூ – 1/2 கிராம்
 • வாய் விடங்கம் – 2 கிராம்
 • இலவங்கப்பத்திரி – 1/2 கிராம்
 • ஓமம் – 2 கிராம்
 • சர்க்கரை – 30 கிராம்
 • திப்பிலி கட்டை – 2 கிராம்
 • இலவங்கம் – 1/2 கிராம்
 • ஜாதிபத்திரி – 1/2 கிராம்
 • கொத்தமல்லி – 6 கிராம்
 • கூகை நீர் – 12 கிராம்

மேல் கூறப்பட்டுள்ள மூலிகைகளில் சர்க்கரையை மட்டும் தவிர்த்துவிட்டு மீதம் உள்ள பொருள்களை இளஞ்சூட்டில் வறுத்து பின் தனி தனியாக பொடியாக்கி எடுத்து அனைத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தாளிசாதி சூரணம் சாப்பிடும் முறை:

தாளிசாதி சூரணம் பொடியை கால் பங்கு அளவிற்கு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிடலாம்.

நிலாவரை பொடி பயன்கள்

எங்கெல்லாம் கிடைக்கும்:

இந்த தாளிசாதி சூரணம் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும், சித்த மருந்து கடைகளிலும் ஈசியாக கிடைக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்