தொடர் விக்கல் வர காரணம் | Vikkal Reason Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் தொடர் விக்கல் வருவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக அனைவருக்கும் விக்கல் வருவது என்பது இயல்பான விஷயம் தான் சிலருக்கு எப்போதாவது விக்கல் வரும். சிலருக்கு அடிக்கடி விக்கல் வரும். சிலருக்கு விக்கல் வந்தால் நீண்ட நேரத்திற்கு நிற்காது. விக்கல் வருவதற்கான காரணம் என்ன என்பது பலருக்கும் தெரியாது. ஆக விக்கல் வருவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
விக்கல் வருவதற்கான காரணம்:
சாதாரணமாக விக்கல் வந்தால் யாரோ நம்மை நினைத்துக் கொள்கிறார்கள் என சொல்வார்கள். சிலர் உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் தான் விக்கல் வருகிறது என சொல்வார்கள். ஆனால் உண்மையில் உதரவிதானத் தசை (Diaphragm muscle) திடீரென சுருங்குவதால், ஒருவித தசைபிடிப்பு ஏற்படுகிறது. இதனால் குரல் நாண்கள் மூடி, விட்டுவிட்டு ஒருவித ஒலியை உண்டாக்குகிறது. இதுதான் விக்கல்.
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்.. இயல்பாக சுவாசம் நடைபெறும்போது விக்கல் உண்டாவதில்லை. சில சமயம் இரைப்பையில் இருக்கும் அமிலத்தால் தாக்கமடைந்து செல்லும் காற்று நுரையீரலை அடையும்போது, விக்கல் உண்டாகிறது.
வேறு எப்போது எல்லாம் விக்கல் வரும்:
உணவில் அதிக அமிலம் சேரும்போதும் விக்கல் உண்டாகும். வேகமாக சாப்பிடுவது, அளவுக்கதிகமாக சாப்பிடுதல், சூடாக உண்பது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, ஒத்துக்கொள்ளாத மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்ற பல வகைகளில் விக்கல் உண்டாகிறது. அடிக்கடி விக்கல் வந்தால், உணவில் அதிக காரம், மசாலாப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
தொடர் விக்கல் வர காரணம்:
இதைத் தவிர, விக்கல் தொடர்ந்து வருகிறது என்றால் அது நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். கல்லீரல் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இரைப்பைப் புண், மூளைக் காய்ச்சல், நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, கணைய அழற்சி போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கும் அடிக்கடி விக்கல் வரும். விக்கல் சில நிமிடங்களில் நின்று போனால் கவலை இல்லை. தொடர்ந்து வந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
விக்கல் நிற்க என்ன செய்ய வேண்டும்? | Vikkal Sari Seivathu Eppadi
தண்ணீர் வேகமாக குடியுங்கள்:
Vikkalai niruthuvathu eppadi tamil:- தங்களுக்கு விக்கல் ஏற்படும் போது தொடர்ந்து பத்து முறை மடமடவென தண்ணீரை குடிக்க வேண்டும். அப்படி வேகமாக குடிப்பதால் விக்கல் நிற்கும்.
தொடர் விக்கல் வரும் நேரத்தில் ஸ்ட்ராவால் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு காதுகளையும் அடைத்துக்கொண்டு காதுகளுக்கு பின்புறம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் சீக்கிரத்தில் விக்கல் நிற்கும்.
காதுகளையும் விரலை வைத்து அடையுங்கள்:
விக்கல் வரும்போது இரண்டு காதுகளையும் விரலை வைத்து குறைந்தது 30 நொடிகள் அடைத்து வைக்கவும். அடைத்துக்கொண்டிருக்கும்போதே காதுகளுக்கு பின்புறம் இருக்கும் மென்மையான காது எலும்புகளை மெதுவாக அழுத்தவும். இது வேகஸ் நரம்புகளுக்கு கட்டளை கொடுத்து ரிலாக்ஸ் ஆக்கும். இதனால் விக்கல் நின்றுவிடும்
எலுமிச்சை பழம்:
விக்கலை நிறுத்த மற்றொரு சிறந்த முறை சிறிது எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை வாயில் வைத்து நன்றாக உறிஞ்சி சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் குறைந்தது 98 சதவீதம் பேருக்கு விக்கல் நின்றுவிடும்.
சர்க்கரை:
பெரும்பாலும் எல்லாராலும் சொல்லப்படுகிற டிப்ஸ் இது. ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்படியே விழுங்குவதன் மூலம் விக்கல் நின்றுவிடும். ஆனால் இது உணவுக்குழாயில் சற்று எரிச்சலை ஏற்படுத்தும்.
பீனட் பட்டர்:
ஒரு ஸ்பூன் பீனட் பட்டரை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்குவதன் மூலம் விக்கல் அப்படியே நிற்கும்.
தேன்:
தேனை சிறிது சுடுதண்ணீரில் கலந்து வாயில் ஊற்றி நாக்கின் அடியில் சிறிது நேரம் வைத்து விழுங்க விக்கல் நிற்கும்.
அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |