நெஞ்சு சளி கரைய என்ன செய்ய வேண்டும்?

Nenju Sali Home Remedy in Tamil

நெஞ்சு சளி வெளியேற என்ன செய்ய வேண்டும்? – Nenju Sali Home Remedy in Tamil

இந்த பதிவை பார்க்க வருகை தந்த அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் நெஞ்சு சளி கரைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனை தான் நெஞ்சில் சளி கட்டிக்கொள்வது. ஆகவே அனைவருக்கும் பயன்படும் வகையில் சளி இருமல் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட இங்கு சில இயற்கை வைத்திய குறிப்புகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

நெஞ்சு சளி – Nenju Sali Kuraiya Tips in Tamil:

சாதாரண இருமலுடன் சளி வந்தால் அந்த பிரச்சனை சீக்கிரம் சரி ஆகிவிடும். ஆனால் நெஞ்சில் சளி இருப்பதற்கான அறிகுறிகள் எளிதில் தெரிவதில்லை. அது மூச்சுக்குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகப்படியான இருமல் வரும் போது தான் நெஞ்சி சளி இருப்பதே தெரிய வரும். மழைக்காலம், பனிக்காலம் என்று அனைத்து காலங்களிலும் சளி, இருமல் பிரச்சனை வரக்கூடும் தான். ஆகவே சாதாரண சளி இருமல் பிரச்சனைக்கெல்லாம் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை. சில விட்டு வைத்திய குறிப்புகளே போதும் நெஞ்சு சளி, இருமல் போன்ற பிரச்சனையை சரி செய்வதற்கு.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் சளி குணமாக இயற்கை வைத்தியம்..!

நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம்: 1

சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து ஹீட் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த எண்ணெயில் சிறிதளவு கற்பூரத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் நெஞ்சில் நன்றாகதடவி விடுங்கள். இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று வேளை செய்யலாம். தொடர்ந்து இரண்டே நாட்கள் இந்த முறையை செய்து வந்தீர்கள் என்றாலே போதும் நெஞ்சு சளி குணமாகிவிடும்.

நெஞ்சு சளி கரைய இயற்கை வைத்தியம்: 2

அனைவரது வீட்டிலும் மிளகு கண்டிப்பாக இருக்கும். இந்த மிளகாய் இடித்து தூள் செய்து கொள்ளுங்கள். பின் ஒரு டம்பளர் பாலில் சிறிதளவு இடித்த மிளகு தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சினால் போதும். பிறகு வடிகட்டி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் பருகுங்கள். இவ்வாறு இரண்டு நாட்கள் பருகி வந்தால் போதும். ஆரம்ப நிலையில் இருக்கும் நெஞ்சு சளி குணமாகிவிடும். ஆனால் இந்த முறை நாள்பட்ட நெஞ்சு சளி உள்ளவர்களுக்கு செட் ஆகாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் சளி, தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம்..!

நெஞ்சு சளி வெளியேற இயற்கை வைத்தியம்: 3

சளி இருமல் பிரச்சனை உள்ளவராகில் நெல்லிக்காய் சாறு எடுத்து அவற்றில் சிறிதளவு மிளகு தூள் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வர சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் உடனடியாக சரி ஆகிவிடும். இருப்பினும் நெல்லிக்காயை இரவு நேரங்களில் மற்றும் மழைக்காலங்களில் மருதனாக பயன்படுத்த கூடாது.

நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம்: 4

புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் சரியாகும்.

நெஞ்சு சளி கரைய இயற்கை வைத்தியம்: 5

நெஞ்சு சளி பிரச்சனைக்கு சிறந்த கை வைத்தியம் இது. குறிப்பாக இந்த முறையை பின்பற்றுவதினால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. அப்படி என்ன டிப்ஸ் என்றுதானே யோசிக்கிறீங்க. அதாவது ஒரு மண் அகல் விளக்கை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் நல்லெண்ணெய் ஊற்றி வாழை திரியால் விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அதனை விளக்கில் காண்பிக்க வேண்டும். பிறகு சூடு பொறுக்கும் அளவில் நெஞ்சில் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்வதினால் கூடிய விரைவில் சளி இருமல் பிரச்சனை சரி ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் நெஞ்சு சளி அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்