பீட்ரூட் ஜூஸ் அதிகம் குடிக்கிறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Beetroot Juice Side Effects in Tamil

அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம். இன்றைய ஆரோக்கியம் பதிவில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நம் அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் காய்கறிகள் அனைத்தும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

பல சத்துக்களை கொண்டுள்ள காய்கறிகளில் முக்கியமான ஓன்று தான் பீட்ரூட். இந்த பீட்ரூட் பல வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அதேபோல பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நம் உடலிலுள்ள சில பாதிப்புகளுக்கு தீர்வு தருகிறது.

இருந்தாலும் இந்த பீட்ரூட் ஜூஸ் அதிகளவில் எடுத்து கொள்வதால் நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு என்ன தீமைகள் ஏற்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பீட்ரூட் ஜூஸ் தரும் நன்மைகள்..!

பீட்ரூட் ஜூஸ் தீமைகள்:

பீட்ரூட் ஜூஸ் தீமைகள்

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் B12 போன்ற இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய கூடிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இந்த பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நமது உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றன.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எவ்வளவு சத்துக்களை கொண்டிருந்தாலும் அதை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல தான் இந்த பீட்ரூட் ஜூஸ். பீட்ரூட் ஜூஸ் அதிகளவில் குடிப்பதால் நமது உடலுக்கு சில உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

வயிற்று வலி:

வயிற்று வலி

பீட்ரூட் ஜூஸில் அதிக சத்துக்கள் இருந்தாலும் அதை அதிகளவில் எடுத்து கொள்ள கூடாது. பீட்ரூட் ஜூஸ் அதிகளவில் குடிப்பதால் குடல் சம்மந்தப்பட்ட உபாதைகளை ஏற்படுத்துகிறது. பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் இது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இரத்த அழுத்தம் ஏற்பட காரணம்:

இரத்த அழுத்தம்

பீட்ரூட் ஜூஸ் அதிகம் குடிப்பதால் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருக்கும் போது பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், பீட்ரூட் இரத்த அழுத்தத்தில் திடீர் சரிவை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது.

சிறுநீரக கற்கள்:

சிறுநீரக கற்கள்

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பீட்ரூட்டில் ஆக்ஸலைட்டுகள் கால்சியத்துடன் பிணைக்கப்பட்டு இறுதியில் சிறுநீரக கற்களை உருவாக்குகிறது. அதனால் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா..?

கர்ப்பிணி பெண்கள் 

கர்ப்ப காலங்களில் பெண்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் எனும் வேதிப்பொருள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. கர்ப்பிணி பெண்கள் பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸை குடிக்காமல் இருப்பதே நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement