மண்ணீரல் நோயிற்கான இயற்கை வைத்தியம்..!

spleen function in tamil

மண்ணீரல் நோய் குணமாக இயற்கை வைத்தியம்..!

அனைவருக்கும் வணக்கம் அன்பான நேயர்களே..! இன்றைய ஆரோக்கியம் பகுதியில் பார்க்க இருப்பது மண்ணீரலில் ஏற்படும் நோய் குணமாக இயற்கை வைத்தியம் பற்றித்தான். மண்ணீரல் (spleen) என்பது உடல் உள் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது வயிற்றின் இடதுப்பகுதியில் உள்ளது. இதன் பிரதான வேலை என்றால் இரத்த சிவப்பணுக்களை இரத்தத்திலிருந்து பிரித்து வெளியேற்றுவது தான்.

இப்படி உடலில் பல முக்கியமான வேலைகளை செய்யக்கூடிய மண்ணீரலில் ஏற்படும் தொற்றுநோய் அல்லது வீக்கம் போன்றவற்றை குணமாக்க இயற்கை முறையில் வைத்தியம் செய்வது பற்றி இந்த பதிவில் விரிவாக கூறப்பட்டுள்ளது. பதிவை முழுதாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் => கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..!

மண்ணீரலில் ஏற்படும் தொற்றுநோய் அல்லது வீக்கம் குறைய இயற்கை மருத்துவம்:

manniral veekam in tamil

மண்ணீரலில் சிவப்புக் கூழ், வெள்ளைக் கூழ் என இருவகை நிணநீர் திசுகள் உண்டு. இவையே உடம்பின் நோய் எதிர்ப்புசக்தி அதிகமாக  உதவுகின்றன.

மண்ணீரல் நோயிற்கான அறிகுறிகள்: 

முதலில் மண்ணீரல் நோயிற்கான அறிகுறிகளை பார்க்கலாம். வயிற்றில் வீக்கம் ஏற்படுவது, சிறுநீர் பிரிவதில் தடை ஏற்படுவது, கைகால்களில் வீக்கம் ஏற்படுவது, சாப்பிடும் உணவுகள் ஜீரணம் ஆகாது போன்றவைதான் மண்ணீரல் நோயிற்கான அறிகுறிகள் ஆகும்.

மண்ணீரல் நோயிற்கான காரணங்கள்:

தொடர்ந்து புகைபிடிப்பது, குடிப்பது, போன்ற பல தீய பழக்கத்திற்கு அடிமையாவதுதான் மண்ணீரல் நோயிற்கான முதன்மையான காரணங்கள் ஆகும்.

மேலும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்பொழுது அந்த உணவுகளுடன் நச்சுக்களும் உடலின் உள்ளே சென்று மண்ணீரலில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.

மண்ணீரல் நோயிருக்கான இயற்கை வைத்தியம்:  

பீர்க்கங்காய் தண்ணீர் செய்ய  தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. பீர்க்கங்காய் – 1
  2. சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. தண்ணீர் – 1/2 லிட்டர் 

பீர்க்கங்காய் தண்ணீர் செய்முறை :

ஸ்டேப்:1

முதலில் நாம் எடுத்துவைத்திருந்த 1 பீர்க்கங்காயை அதன் மேலே உள்ள பச்சை நிற தோலை நீக்கிவிட்டு அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

பின்பு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை போட்டு அதனுடனே 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள்.

இந்த கொதிக்க வைத்த பீர்க்கங்காய் தண்ணீரை  மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். அதன் சூடு ஆறியவுடன் பீர்க்கங்காய் நீரை குடியுங்கள். இதனை தொடர்ந்து குடித்துவந்தால் நல்ல தீர்வை அளிக்கும்.

ஸ்டேப்:3

மண்ணீரலின் ஆரோக்கியத்தை காக்க, தாகம் எடுக்கும் போதெல்லாம் தேவையான அளவிற்கு தண்ணீர் பருக வேண்டும்.

கீரை, காய்கறிகள், தோடைப்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ அல்லது நாவல்பழத்தையோ உண்பது  நல்லது. மண்ணீரல் ஆரோக்கியமாக இருந்தால், ஜீரண மண்டலமும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்