முள்ளங்கி கீரை பயன்கள் | Radish Keerai Benefits in Tamil
கீரை என்றாலே உணவில் ஒதுக்கிவைத்து விட்டு சாப்பிடுவோம்.. குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்திலே சாதத்தில் கீரை சேர்த்து ஊட்டி பழக்க வேண்டும். ஏனென்றால் கீரையில் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். முள்ளங்கி கேள்வி பட்டிருப்போம், ஆனால் முள்ளங்கி கீரை என்றால் ஒரு சிலருக்குத்தான் தெரிய வாய்ப்புள்ளது. அதென்ன முள்ளங்கி கீரை என்று கேட்கிறீர்களா. முள்ளங்கியின் மேல் புறத்தில் இருக்கக்கூடிய கீரைதான் முள்ளங்கி கீரை. இதனை பெரும்பாலோனோர் சமைக்காமல் முள்ளங்கியை மட்டும் சமைத்துவிட்டு அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகிறார்கள். நாம் எதை தூக்கி வீசுகிறமோ அதில் தான் அதிகமாக சத்துக்கள் உள்ளன என்பது பல பேருக்கு தெரிவதில்லை. நாம் தூக்கி போடும் முள்ளங்கியின் மேல் இருக்கக்கூடிய கீரையில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று தெரிஞ்சிக்கலாம் வாங்க..!
மணத்தக்காளி கீரை பயன்கள் |
உடல் எடை குறைய:
உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேருவதால் தான் உடலில் எடை அதிகரித்து பல நோய்கள் வருகிறது. உடலில் எடை அதிகமாக இருப்பது எதிர்காலத்தில் பல விதமான நோய்களை ஏற்படுத்தும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதற்கான ஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவுகளை நாம் கடைபிடித்தால் மட்டும் தான் எடை குறைய தொடங்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இப்போதே உணவில் அதிகமாக முள்ளங்கி கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முள்ளங்கி கீரையில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேருவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாத்து கொள்கிறது.
சர்க்கரை நோய் குணமாக:
சர்க்கரை நோய் உள்ளவர்களால் ஆசைப்படும் அளவிற்கு எந்த ஒரு இனிப்பு உணவுகளையும் அவர்களால் சாப்பிட முடியாது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டால் பல தாக்கங்கள் உடலில் தென்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஏதேனும் ஒரு கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கீரை வகைகளில் குறிப்பாக முள்ளங்கி கீரையை சேர்த்துக்கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து ஆரோக்கியமாய் வாழலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையும் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது இந்த முள்ளங்கி கீரை.
பூச்சி கடி வைத்தியம்:
பூச்சி கடியானது இரவில் நாம் வெளியில் செல்லும்போதோ, அல்லது வீட்டிற்கு அருகிலுள்ள புதர்களில் இருந்து சில பூச்சிகள் கடித்து விடுவதால் தோல் பகுதியில் அரிப்பு, சிவந்து போதல், பூச்சி கடி வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறது. பூச்சி கடியினால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனையும் வந்துவிடுகிறது. பூச்சி கடி பிரச்சனைக்கு மற்றும் ஒவ்வொமை பிரச்சனை சரியாக முள்ளங்கி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை பயன்கள் |
வெந்தய கீரை நன்மைகள் |
கண் பார்வை அதிகரிக்க:
இப்போது பெரும்பாலும் அனைவருக்குமே கண் பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கிறது. இதற்கு காரணம் நீண்ட நேரம் மொபைல் பார்ப்பது, இரவில் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதால் கண் பார்வை திறன் குறைந்து காணப்படுகிறது. கண் பார்வை திறன் அதிகரிக்க புரதச்சத்து குறைந்த உணவுகளையும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கண் பார்வை திறன் அதிகரிக்க முள்ளங்கி கீரையை அடிக்கடி உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வர கண்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இளம் வயதிலையே கண்ணாடி போடும் பிரச்சனையும் குறைந்துவிடும்.
கால்சியம் குறைபாடு நீங்க:
உடலில் சத்துக்களில் முக்கியமான ஒன்று கால்சியம். கால்சியம் சத்து குறைவாக இருந்தால் உடல் சோர்வு, மயக்கம், அடிக்கடி தலைவலி போன்ற பல பிரச்சனைகள் வரும். முள்ளங்கி கீரையில் அதிகமாக கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ள முள்ளங்கி கீரையை தினமும் சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஏற்படும் எலும்புத் தேய்மானத்தை சரிசெய்ய உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |