வாழை தண்டின் பயன்கள் | Banana Stem Benefits in Tamil

Advertisement

வாழைத்தண்டு நன்மைகள் | Valaithandu Benefits in Tamil

ஒரு தாவரத்தின் அடி முதல் நுனி வரை பல விதங்களிலும் பயன்படுத்தலாம் என்றால் அது வாழை தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழை பூ, வாழைப்பழம், வாழைக்காய் என இந்த மரம் கொடுக்க கூடிய அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியவையாக இருக்கிறது. இதன் ஒவ்வொரு பகுதியும் பல விதமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அதிலும் முக்கியமாக வாழைத்தண்டு உடலுக்கு பல வித பயன்களை தரக்கூடியது. ஒரு சிலர் இதனுடைய சுவை துவர்ப்பாக இருப்பதால் பெரும்பாலும் உணவில் சேர்த்து கொள்வதில்லை. ஆனால் இதில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால் யாரும் சாப்பிடாமல் இருக்கமாட்டீர்கள். இந்த பதவில் வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சிறுநீரக கற்கள்:

Valaithandu Uses in Tamil

  • Valaithandu Uses in Tamil: உடலில் சேரும் அதிக அளவு உப்பு மற்றும் பல காரணங்களாலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது, அதனை சரி செய்வதற்கு வாழைத்தண்டு ஒரு சிறந்த மருந்து.
  • வாழைத்தண்டு ஜூஸ் காலையில் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து சிறுநீரகத்தின் வழியாக வெளியேறிவிடும். வாழைத்தண்டு ஜூஸ் பருகும் போது அதில் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து குடித்தால் சிறுநீரக கற்கள் வெளியேறும் போது வலி ஏற்படாது.
  • வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து குடித்தால், வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஒன்றாக சேர்ந்து பொட்டாசியம் சிட்ரேட்டாக மாறி சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.

கழிவுகள் வெளியேற:

Valaithandu Health Benefits in Tamil

  • வாழை தண்டின் பயன்கள்: உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கு வாழைத்தண்டை கூட்டு செய்து, அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்.
  • இதன் மூலம் உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி தேகம் ஆரோக்கியம் அடைவதற்கும், உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

உடல் எடை குறைய:

வாழை தண்டின் பயன்கள்

  • Valaithandu Health Benefits in Tamil: நம்முடைய உடல் எடை அதிகரிப்பதற்கு கொழுப்பு நிறைந்த உணவுகள் காரணமாக இருப்பதை போல, உடல் பருமனை குறைப்பதற்கு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் காரணமாக இருக்கிறது.
  • வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது உங்கள் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே உடல் பருமனாக இருப்பவர்கள் வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இது உங்களுக்கு தொப்பையை குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்.
  • மேலும் இது பசி அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் அதன் மூலம் நீங்கள் கண்ட நேரங்களில் சாப்பிடுவது தவிர்க்க முடியும்.

இரத்த சோகையை குணப்படுத்த:

வாழை தண்டின் பயன்கள்

  • Valaithandu Benefits in Tamil: இரும்பு சத்து நம் உடம்பில் குறைவாக இருக்கும் போது இரத்தத்தின் அளவு குறைந்து இரத்த சோகை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் அதிகம் இருக்கிறது.
  • எப்படி கீரை, பேரீச்சம் பழத்தில் எல்லாம் இரும்பு சத்து இருக்கிறதோ அதே போன்று வாழைத்தண்டிலும் இருக்கிறது.
  • மேலும் இதில் வைட்டமின் பி6 சத்தும் உள்ளது, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கு வாழைத்தண்டு சிறந்த உணவு என்றே சொல்லலாம்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

ஜீரண சக்தியை மேம்படுத்த:

Banana Stem Benefits in Tamil

  • வாழை தண்டின் பயன்கள்: ஒரு சிலருக்கு என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டாலும் எளிதில் ஜீரணம் அடையாது. அஜீரண கோளாறு உள்ளவர்கள் வாழைத்தண்டு பொரியல், கூட்டு அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • வாழைத்தண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், அதனால் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்கள் சுரந்து அஜீரண கோளாறுகளை சரி செய்யும்.

சர்க்கரை நோய்:

Banana Stem Benefits in Tamil

  • Banana Stem Benefits in Tamil: இப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனை என்றால் அது சர்க்கரை நோய்.
  • இந்த நோயை தடுப்பதற்கு வாழைத்தண்டு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
  • உடலில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தால் சிறுநீரகமும் பாதிப்படையாமல் இருக்கும்.

வாழைத்தண்டு தினமும் சாப்பிடலாமா:

25 கிராம் அளவு வாழைத்தண்டை தினமும் சாப்பிடலாம்.

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement