Advertisement
வெட்டி வேர் பயன்கள் | Vetti Veru Uses in Tamil
நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த மூலிகையில் வெட்டி வேர் முக்கியமான ஒன்றாக உள்ளது. புல் வகையை சேர்ந்த இந்த வெட்டி வேர் உடலுக்கு பல விதமான நன்மைகளை தருகிறது. மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெட்டி வேர் ஆற்று ஓரங்களில் வளரும் தன்மை கொண்டது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஒரு மாமருந்து இந்த வெட்டி வேர். வெட்டிவேரினை பற்றி நாம் அறியாத பல பயன்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
உடல் உஷ்ணம் நீங்க:
- Vetiver Uses in Tamil: கோடை காலங்களில் உடல் உஷ்ணம் அதிகரித்து நீர் எரிச்சல், நீர் கடுப்பு போன்றவை ஏற்படும்.
- மண் பானையில் தண்ணீர் வைத்து அதில் வெட்டி வேரை போட்டு குடித்து வந்தால் உடல் உஷ்ணம் நீங்கி சிறுநீரகம் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். இந்த வெட்டி வேர் கலந்த நீரை குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி, உடல் புத்துணர்ச்சி பெறும்.
- வியர்வை, அரிப்பு மற்றும் துர்நாற்றத்தை நீக்க வெட்டி வேரை நீரில் சேர்த்து குளிக்கலாம்.
உடல் வலி நீங்க:
- Vetiver Benefits in Tamil: காய்ச்சல் வந்த பிறகு நாம் அனைவருமே உடல் சோர்வுடனும், உடல் வலியுடனும் இருப்போம். இதனை சரி செய்ய தேவையான அளவு வெட்டி வேரை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
- இந்த நீரை குடிப்பதால் ஜீரண சக்தி அதிகரித்து செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வயிற்று புண்ணை குணப்படுத்தவும் இந்த வெட்டி வேர் ஒரு அருமருந்தாக உள்ளது.
பருக்கள் நீங்க:
- Vetiver Water Benefits in Tamil: இப்பொழுது பெண்களுக்கும், ஆண்களுக்கும் சருமத்தில் எண்ணெய் வழிவதால் அல்லது ஜீன் காரணத்தால் முகத்தில் அதிகமாக பருக்கள் வந்து சரும அழகை பாதிக்கிறது.
- பருக்கள் இல்லாமல் முகம் அழகாக இருக்க வெட்டி வேரை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் அதில் கடுக்காய் பொடி 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து வெந்நீரில் 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பின் அதை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.
தீக்காயம் குணமாக:
- வெட்டி வேர் பயன்கள்: நம் எதிர்பார்க்காத சமயத்தில் கைகளில், கால்களில் அல்லது உடம்பில் வேறு எங்காவது தீக்காயம் ஏற்படலாம். அந்த தீக்காயத்தினை சரி செய்ய வெட்டிவேரை அரைத்து அந்த விழுதினை தீக்காயத்தின் மேல் தடவி வரலாம்.
- மேலும் தழும்புகள் விரைவில் மறையவும் உதவியாக இருக்கும்.
கூந்தல் பராமரிப்பிற்கு:
- Vetti Veru Uses in Tamil: உடல் உஷ்ணம் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் முடி அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.
- முடி உதிர்வை தடுக்க வெட்டி வேரை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து அந்த எண்ணெய்யை தலைக்கு தடவி வரலாம். முடி உதிர்வதை தடுப்பதோடு, கூந்தல் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.
மன நோயை குணப்படுத்த:
- வெட்டி வேர் பயன்கள்: வெட்டி வேரில் தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய் மன அமைதிக்கும், மன நோயை குணப்படுத்தவும் உதவுகிறது.
- மேலும் வெட்டி வேரை வைத்து குளியல் பொடி, சோப்பு, வாசனை திரவியங்கள், மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |
Advertisement