10 Benefits of Eating Bitter in Tamil
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவு பாகற்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்..! பொதுவாக இந்த காயை முன்பு காய்கறிகடைகளை பார்த்திருக்க மாட்டோம். ஏனென்றால் இது கிராமங்களில் கொடியாக இருக்கும். அங்கு சென்று நாம் பறித்து சாப்பிடுவோம். அதனுடைய நன்மைகளை பற்றி அதிகளவு யாருக்கும் தெரியாது. அதனை பற்றிய நன்மைகள் தெரிந்த உடன் அதனை வாங்குவதற்கு முன் வருகிறார்கள்.
அதேபோல் முன்பு அதனை யாரும் காசு கொடுத்து வாங்குவது இல்லை பெரிய பாகற்காய் மட்டுமே வாங்குவார்கள். ஆனால் இப்போது அந்த பாகற்காயை காசு கொடுத்து வாங்கி செல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பெரிய பாகற்காயை விட இந்த மிதி பாகற்காய் அவ்வளவு நன்மைகள் தருகிறது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் இன்று நாம் பாகற்காய் சாப்பிட்டால் கிடைக்கும் 10 நன்மைகளை பற்றி பார்ப்போம் வாங்க..!
10 Benefits of Eating Bitter in Tamil:
சுவாச பிரச்சனை தீர்வு:
பொதுவாக பாகற்காய் மிகவும் கசப்பாக இருக்கம் ஆனால் அதனை முறுகலாக வறுக்கும் போது அதில் கசப்பு தன்மை சாப்பிடும் அளவிற்கு தான் இருக்கும். உடலில் எவ்வளவுக்கு எவ்வளவு கசக்கு தன்மை சேர்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை ஆகும். ஆகவே அதனை சாப்பிடுவதால் ஆஸ்மா, சளிக்கு நல்ல மருந்தாக உள்ளது. மேலும் சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்து பயனளிக்கிறது.
கல்லீரல் நன்றாக இயங்க:
தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்தால். கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் உதவுகிறது. முக்கியமாக 1 வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் பலனை நீங்களே அறிய முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
பாகற்காய் அல்லது பாகற்காய் இலைகள் இரண்டில் ஏதாவது ஒன்றை வேக வைத்து அதனுடைய நீரை பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும். நோய் எதுவும் உங்களை நெருங்காது.
முகப்பருக்கள் நீங்க:
பாகற்காயை தினமும் உட்கொண்டு வந்தால் சருமம் தொடர்பான பிரச்சனையிலிருந்து விடுபட முடியும் மேலும் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்கும். அதுமட்டுமில்லாமல் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் எண்ணற்ற பலன்களை பார்க்க முடியும்.
Type 2 Diabetes Treatment in Tamil:
முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. சர்க்கரை நோயில் type 2 க்கு மருந்தாகத்தான் உள்ளது. ஜூஸ் செய்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவை குறைத்து சர்க்கரையில் அளவை சமமாக வைக்கிறது.
மலச்சிக்கல் தீர எளிய வழிகள்:
பாகற்காயில் நார்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு நல்ல மருந்தாகவும் உள்ளது. இதனை உட்கொள்வதால் உடலுள் உணவுகளை செரிமானத்திற்கு தள்ளப்பட்டு மலச்சிக்கலிருந்து விடவும் வழி வகுக்கிறது.
இதையும் செய்திடுங்கள் 👉👉 வயசானாலும் இளமையாகவே இருக்க கொலாஜன் உணவுகள்
சிறுநீரக கற்கள் கரைய:
சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய மருந்து மாத்திரை எடுத்துக்கொள்வதை விட இந்த பாகற்காய் உட்கொள்ளவதன் மூலம் சுலபமான முறையில் சிறுநீரக கற்களை கரைக்க முடியும்.
கெட்ட கொழுப்பு கரைய:
உடலில் சிலருக்கு தேவையில்லாத கொழுப்புகள் அதிகம் இருக்கும் அதனை சுலபமான முறையில் குறைக்க பாகற்காய் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் குறையும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும் வராமல் தடுக்கும்.
புற்றுநோய் வராமல் தடுக்க:
புற்று நோய் வந்த பின் அதனை போக்க நிறைய வழிகளை கையாளுகிறோம் ஆனால் அது அனைத்தும் செய்வதற்கு உடலில் புற்று நோய் வராமல் தடுக்க செய்யலாம் வாங்க பார்க்கலாம். பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் உடலில் புற்று நோய் செல்கள் வளராமல் தடுக்க முடியும்.
எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்:
பாகற்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆகவே பாகற்காய் உட்கொள்வதால் வளர்ச்சிதை மாற்றத்தை சரி செய்யும். உடலில் செரிமான மண்டலத்தை தூண்டி நல்ல செரிமானத்தை உருவாக்கும். அதனால் வேகமாக உடல் எடை குறைக்க முடியும்.
இதையும் செய்திடுங்கள் 👉👉 இதெல்லாம் சாப்பிட்டால் நீங்கள் இளமையை இழந்துவிடுவீர்கள்..! பாத்து கவனமாக இருங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |