ஆகாச கருடன் கிழங்கு மருத்துவ பயன்கள்..! Agasa Garudan Kilangu Benefits..!

Advertisement

Agasa Garudan Kilangu Benefits..!

Agasa Garudan Kilangu Benefits: இந்த ஆகாச கருடன் கிழங்கு ஒரு அபூர்வமான மூலிகையாகும். இந்த மூலிகையை கட்டி போட்டால் குட்டி போடும் இலை என்று சொல்வார்கள். இந்த ஆகாச கருடன் கிழங்கு அனைவரது வீட்டு வாசல்களிலும் திருஷ்ட்டிக்காக கட்டுவார்கள்.

இருப்பினும் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படுத்தும் வல்லமை இந்த ஆகாச கருடன் கிழங்குக்கு உண்டு. சரி இந்த ஆகாச கருடன் கிழங்கு மருத்துவ பயன்கள் சிலவற்றை இங்கு நாம் படித்தறிவோம் வாங்க…

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

ஆகாச கருடன் கிழங்கு பயன்கள் / Agasa Garudan Kilangu Benefits: 1

நாய், நரி, குரங்கு, பூனை போன்றவை சில நேரங்களில் நம்மை கடித்து விடும். அந்த சமயத்தில் ஆகாச கருடன் கிழங்கை மென்மையாக அரைத்து, 50 மில்லி நீரில் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து காலையில் பருகவேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த ஆகாச கருடன் கிழங்கை அரைத்து பூச வேண்டும். இவ்வாறு செய்வதினால் விலங்குகளின் கடிநஞ்சு முறிக்கப்படும்.

ஆகாச கருடன் கிழங்கு பயன்கள் / Agasa Garudan Kilangu Benefits: 2

சீதப்பேதி குணமாக 5 மில்லி ஆகாச கருடன் கிழங்கு பொடியினை 100 கிராம் நீரில் கலந்து நன்றாக காய்ச்சி காலை, மாலை இருவேளையும் அருந்திவர சீதப்பேதி குணமாகும்.

ஆகாச கருடன் கிழங்கு பயன்கள் / Agasa Garudan Kilangu Benefits: 3

கீழ் வாதம் குணமாக: கீழ் வாதம் என்பது கால் மூட்டுகளில் இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதினால் ஏற்படுவதாகும். இந்த கீழ் வாதம் பிரச்சனையை சரி செய்ய ஆகாச கருடன் கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.

எனவே கீழ் வாதம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் 100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து, பின் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் கீல்வாதத்தில் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்வதினால் கூடிய விரைவில் இந்த கீல்வாதம் பிரச்சனை குணமாகும்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

ஆகாச கருடன் கிழங்கு பயன்கள் / Agasa Garudan Kilangu Benefits: 4

பாம்பு கடித்தவுடன் இந்த ஆகாச கருடன் கிழங்கினை எலுமிச்சை பழம் அளவு நறுக்கி, வெறும் வாயில் சாப்பிட சொல்லவேண்டும். பாதிக்கப்பட்டவர் இந்த ஆகாச கிழங்கை சாப்பிட்டவுடன், சில நிமிடங்களில் வாந்தி மற்றும் பேதி ஏற்படும். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் விஷம் முறிந்து குணமடைவார்கள்.

விஷம் முறிந்து உயிர் பிழைத்தவர்கள் அதன் பிறகு 24 மணி நேரம் வரை தூங்கக்கூடாது. பசிக்கு அரிசியை நன்கு குழைய வேகவைத்து, கஞ்சியாக கொடுக்க வேண்டும்.

ஆகாச கருடன் கிழங்கு பயன்கள் / Agasa Garudan Kilangu Benefits: 5

மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கிவிட்டால் குஷ்டம் என்ற வியாதியை ஏற்படுத்தும். இந்த பாம்பு விஷம், நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும்.

இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரலில் போட்டு நன்றாக இடித்து சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும்.

இவ்வாறு நாற்பது நாட்கள் அருந்தி வந்தால் மண்ணுளிப் பாம்பின் விஷம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.

குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement