அம்மான் பச்சரிசி பயன்கள் | Amman Pacharisi Uses in Tamil

Advertisement

அம்மான் பச்சரிசி மருத்துவ பயன்கள் | Amman Pacharisi Benefits in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் எங்களது வணக்கங்கள். பொதுவாக நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றயெல்லாம் விட கீரைகள் மற்றும் மூலிகை செடிகளில் தான் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே நாம் உணவு முறைகளில் அதிகளவு கீரைகள் மற்றும் மூலிகை செடிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் நமது முன்னோர்கள் நோயில்லாமல் நீட காலம் வரை வாழ்ந்து வந்தது முக முக்கிய காரணம் சத்துக்கள் நிறைந்த கீரைகள் மற்றும் மூலிகை செடிகள் தான். அப்படி நமது முன்னோர்கள் அதிகளவு பயன்படுத்திய மூலிகை செடிகளில் ஒன்று தான் அம்மான் பச்சரிசி. இந்த மூலிகை செடி சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. இந்த மூலிகை செடியை வைத்து நம் உடலில் ஏற்படக்கூடிய பலவகையான பிரச்சனைகளை சரிப்படுத்தலாம். சரி இந்த பதிவில் அம்மான் பச்சரிசி மருத்துவ பயன்கள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

அம்மான் பச்சரிசி இலை எப்படி இருக்கும்:

இந்த அம்மான் பச்சரிசி இலை கீழ் படத்தில் உள்ளது போன்று தான் இருக்கும்.

அம்மான் பச்சரிசி இலை மருத்துவம் | Amma Pacharisi Leaf Benefits in Tamil:

முகத்தில் உள்ள மரு மறைய டிப்ஸ்:-

சிலருக்கு முகத்தில் மருக்கள் ஏற்படும். இத்தகைய மருக்கள் முகத்தில் வந்தால் அவர்களது சரும அழகையே கெடுத்துவிடும். இத்தகைய மருக்களை முகத்தில் இருந்து அகற்றுவதற்கு பலர் பலவகையான சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றன இருப்பினும் அந்த மருக்கள் முகத்தில் இருந்து உடனடியாக மறைந்துவிடுவதில்லை. இந்த பிரச்சனைக்கு மிக சிறந்த மருந்தாக அம்மான் பச்சரிசி விளங்குகிறது. அம்மான் பச்சரிசி செடியை உடைத்தால் அதில் இருந்து ஒருவகையான பால் வரும் அந்த பாலை முகத்தில் உள்ள மருக்கள் மீது தடவி வரவும். இவ்வாறு செய்து வருவதன் மூலமாக மரு கூடிய விரைவில் சரி ஆகிவிடும். மரு இருந்ததிற்க்கான அடையாளம் கூட எதுவும் இருக்காது.

அவல் பயன்கள்

வயிற்றுப்போக்கு  குணமாக:-

வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப்போக்கு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிதளவு அம்மான் பச்சரிசி இலையை பறித்து நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். பின் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அவற்றில் சுத்தம் செய்து வைத்துள்ள அம்மான் பச்சரிசி மூலிகை செடியினை போட்டு தண்ணீரின் நிறம் மாறும் வரை நன்கு கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள். பின் இந்த நீரை வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும். இவ்வாறு குடிப்பதன் மூலம் வயிற்றுபோக்கு பிரச்சனை குணமாகும்.

முகப்பரு நீங்க:

சிலருக்கு முகத்தில் அதிகளவு பருக்கள் இருக்கும். அப்படி பட்டவர்கள் ஒரு ஸ்பூன் அம்மான் பச்சரிசி மூலிகையின் தூளினை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள், அதனுடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் அரிசி கழுவிய நீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கலவையை முகப்பரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகப்பரு நீங்க ஆரம்பிக்கும்.

கரிசலாங்கண்ணி நன்மைகள்

தாய்ப்பால் சுரக்கும்:

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

ஆஸ்துமா குணமாக:

ஆஸ்துமா குணமாக

ஆஸ்துமா பிரச்சனைக்கு அம்மான் பச்சரிசி இலை சிறந்த வீட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அம்மான் பச்சரிசி மூலிகையில் ஆஸ்துமா நோயாளிகள் தேநீர் செய்து குடித்தால் ஆஸ்துமா பிரச்சனை குணமாகும்.

வெள்ளைப்படுதல் நீங்கும்:

Leukorrhea

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

துளசியின் மருத்துவ குணங்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement