அறிவாள்மனை பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

sida acuta benefits in tamil

அறிவாள்மனை பூண்டு | Sida Acuta 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் அறிவாள்மனை பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கியங்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பூண்டு என்றால் எல்லோருக்கும் தெரியும் அது ஒரு காய் வகையை சேர்ந்தது, ஆனால் இந்த அறிவாள்மனை பூண்டு பற்றி சிலருக்கு தெரியாது, இவை ஒரு செடிவகையை சார்ந்தது. இவை பொதுவாக சாலை ஓரங்களிலும், கிராமங்களிலும் அதிகம் மண்டி இருக்கும் ஒரு மூலிகை செடியாகும். மேலும் அறிவாள்மனை பூண்டு என்றால் என்ன, இவற்றால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பாப்பரை எனும் மரகோதுமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?

அறிவாள்மனை பூண்டு என்றால் என்ன? | What is Sida Acuta Plant in Tamil:

sida acuta in tamil

அறிவாள்மனைப் பூண்டு அரிவாள் மூக்குப் பச்சிலை என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு செடி வகையை சார்ந்தது. மால்வேசியே குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவை பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் பூக்கும் தாவரமாகும். இதனுடைய பூக்கள் மஞ்சள் நிறத்தை கொண்டிருக்கும். இவை கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையும் கொண்டது.

அறிவாள்மனை பூண்டு பயன்கள்:

அறிவாள்மனை பூண்டு செடியானது விவசாயிகளின் நிலத்தை பாதுகாப்பதற்கும், பயிர் மற்றும் செடிகளுக்கு உரமாகவும், பூச்சிக்கொல்லி பொருளாகவும் விளங்குகிறது. மேலும் இவை பல மருத்துவ குணங்களுக்கு நாட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவற்றின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

அறிவாள்மனை பூண்டு நன்மைகள்:

உடல் காயம்:

Blood injury in tamil

உடலில் ஏற்படும் காயங்களை நீக்குவதாற்கு இந்த அறிவாள்மனை பூண்டு உதவியாக இருக்கிறது, அதாவது வெட்டு காயம், அடிபட்ட காயம், தீ காயம் போன்றவற்றிக்கு ஏற்படும் இரத்த கசிவுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதனுடைய இலைகளை அரைத்து அல்லது கையில் கசக்கி காயங்கள் மீது தடவி வந்தால் இரத்த கசிவுகளை நிறுத்தி காயங்கள் ஆறுவதற்கு மருந்தாக பயன்படுகிறது.

சிறுநீராக பிரச்சனை:

 kidney problem solution in tamil

அறிவாள்மனை பூண்டுயின் இலைகளுக்கு சிறுநீரை அதிகரித்து சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சலை கட்டுப்படுத்தும் தன்மையும்  உள்ளது. அதாவது இதனுடைய இலைகளை தண்ணீரில் கொத்திக்க வைத்து வடிகட்டி தினமும் அருந்திவந்தால் சிறுநீரை அதிகரிக்க செய்க்கிறது.

தோல் பிரச்சனை:

skin problems solution in tamil

தோல் பிரச்சனைகளான விஷக்கடி, சொரி, கொப்பளம், அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு  அறிவாள்மனை பூண்டு இலைகளை எடுத்துக் கொண்டு அதில் குப்பைமேனி இலைகளையும் மஞ்சத்தூள் சேர்த்து அரைத்து தோல் பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சில நாட்களிலே குணமாகிவிடும்.

உடல் வீக்கம்:

udal veekam kuraiya

 

உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் திறன் இதற்கு அதிகம் உள்ளது. தினமும் அறிவாள்மனை பூண்டு இலைகளை கஷாயம் செய்து குடித்து வந்தால் கெட்ட  நீரை வெளியேற்றுவதற்கும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடலில் ஏற்படும் கை, கால் வீக்கம் போன்ற வலிகளையும் சரிசெய்க்கிறது.

பல் வலி பிரச்சனை:

pal vali treatment in tamil

பல் வலி மற்றும் ஈரல் வீக்கம், பல்களில் இரத்த கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு இதன் இலைகள் கசக்கி பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து வந்தால் பல் வலி பிரச்சனை சரியாகிவிடும், அதோடு அதன் இலைகளை தண்ணீரில் கொத்திக்க வைத்து பல்லில் படும்படி கொப்பளித்து வந்தால் பல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.

பிறப்புறுப்பு பிரச்சனை:

pirappu uruppu vali

பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு அரிப்புகள், வெள்ளைப்படுதல், போன்ற பிரச்சனைகளுக்கு அறிவாள்மனை பூண்டு வேர்ப்பட்டையை காயவைத்து பொடி செய்து பால் காய்ச்சு, அந்த பொடியாய் கலந்து சாப்பிட்டு வந்தால்  பிறப்புறுப்பு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

தலைவலி:

thalai vali kunamaga vaithiyam

தலைவலி பிரச்சனைகளான ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு இதனுடைய இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு வந்தால் தலைவி பிரச்சனைகள் சரியாகிவிடும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்