அஸ்வகந்தா லேகியம் பயன்கள் | Ashwagandha Lehyam Uses in Tamil

Advertisement

அஸ்வகந்தா லேகியம் நன்மைகள் | Ashwagandha Lehyam Benefits in Tamil

Ashwagandha Uses in Tamil: வணக்கம் நண்பர்களே..! மூலிகை செடிகளில் சிறந்து விளங்கக்கூடிய அஸ்வகந்தா பற்றிய சில நன்மைகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம். “அஸ்வம்” என்றால் வடமொழியில் குதிரை என்று பொருள். “கந்தம்” என்றால் கிழங்கு என்பது பொருளாகும். அஸ்வகந்தாவின் இலையினை முகர்ந்து பார்த்தால் குதிரையின் வாசம் அடிப்பது போன்று இருப்பதால் அஸ்வகந்தா என்று வடமொழியில் அழைக்கிறார்கள். அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி என்ற பல பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை நீண்ட நாள் வரையிலும் சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே இப்போது சிறந்த மூலிகை நிவாரணமான அஸ்வகந்தாவை சாப்பிடுவதால் என்னென்ன நோய்களிலிருந்து தப்பிக்கலாம் என்பதை பற்றி படித்தறியலாம்.

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள்

தூக்கமின்மையை தடுக்கும் அஸ்வகந்தா :

Ashwagandha Uses in Tamilஅஸ்வகந்தா மூலிகையானது மன அழுத்தத்தினை குறைக்கும். அஸ்வகந்தாவில் அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் அதிகமாக நிறைந்துள்ளதால் மன சோர்வினை குறைத்துவிடும். அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தினை குறைத்து இரவில் நிம்மதியான உறக்கத்தினை கொடுக்கிறது.

நீரிழிவு நோயை குணமாக்கும் அஸ்வகந்தா:

Ashwagandha Uses in Tamil

இந்த காலத்தில் சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். அப்படி சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் சுரப்பியானது அதிகரிக்க Insulin Injection பயன்படுத்துவார்கள் அதற்கு பதிலாக அஸ்வகந்தாவை பயன்படுத்தலாம். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், உடல்நிலை சீராக இருப்பவர்களுக்கும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை சீராக வைத்திருக்க இந்த அஸ்வகந்தா மூலிகை உதவியாக உள்ளது. உடலில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் எந்த அளவிற்கு அஸ்வகந்தாவினை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரை அணுகி எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

மூலிகை சாறும் அதன் பயன்களும் !!! நோய் தீர்க்கும் மருந்து

பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டு பிரச்சனையை சரி செய்யும்:

Ashwagandha Uses in Tamil30 வயதினை கடந்துவிட்டாலே அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்றுதான் இந்த மூட்டுவலி பிரச்சனை. மூட்டு பகுதியில் வீக்கம், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் அஸ்வகந்தாவினை பயன்படுத்தி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்:

Ashwagandha Uses in Tamil“மைடேக் காளான் சாறு”(இது ஒருவகை ஆசியாவில் பயன்படுத்தப்படும் சமையல் காளான்) அஸ்வகந்தா மூலிகையுடன் சேர்த்து சாப்பிட்டு வர நமக்கு உண்டாகும் நோய் தொற்று அபாயத்திலிருந்து விடுபடலாம்.

ஜலதோஷம் நீங்க அஸ்வகந்தா:

Ashwagandha Uses in Tamil

வெயில் காலத்திலும் சரி, மலை காலத்திலும் சரி அனைவருக்கும் இயல்பாக வரக்கூடியது ஜலதோஷம். ஜலதோஷத்தை விரட்ட நாம் நிறைய ஆங்கில மருத்துவம் மற்றும் பாட்டி வைத்திய முறையை கையாண்டு இருப்போம் அந்த வகையில் ஜலதோஷத்தினை எளிமையாக குணப்படுத்த அஸ்வகந்தாவுடன் தேநீர் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் ஜலதோஷம் சரியாகும்.

அஸ்வகந்தா பொடியினால் கிடைக்கும் பயன்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement