அதலைக்காய் மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Athalakkai Health Benefits in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..🙏  இன்றைய ஆரோக்கியம் பதிவில் அதலைக்காய் மருத்துவ பயன்கள் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த அதலைக்காய் ஒரு கொடி வகையை சேர்ந்தது. இந்த அதலைக்காய் பாகற்காய் குடும்பத்தை சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இது நம் தமிழ் நாட்டிலும் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது. இது நீளம் 20 முதல் 25 மி.மீட்டர் வரை இருக்கும். இந்த அதலைக்காய் கரும்பச்சை நிறத்தில் பாகற்காய் போலவே கசப்பான சுவையை கொண்டுள்ளது. இருந்தாலும் இது உடல்நலத்துக்கு உதவும் பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இந்த அதலைக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உடலில் ஆற்றலை பெருக்கும் சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்..!

 

அதலைக்காய் மருத்துவ பயன்கள்:

இந்த அதலைக்காயில் துத்தநாகம், வைட்டமின் C, நார்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது ஒரு அரியவகை மூலிகை என்றும் சொல்லப்படுகிறது. இது கிராமப் பகுதிகளில் அதிகளவு காணப்படுகின்றன. இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க: 

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க

 மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்கள் இந்த அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.  அதலைக்காயை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோயை அடியோடு விரட்டலாம்.

அதுமட்டுமில்லாமல், இது மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது.

சர்க்கரை நோயை குணப்படுத்த: 

சர்க்கரை நோயை குணப்படுத்த

 அதலைக்காயில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.  இதில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு அருமருந்தாக இருக்கிறது.

சிறுநீரக கற்கள் கரைய: 

சிறுநீரக கற்கள் கரைய

இந்த அதலைக்காயில் உள்ள பைடோநியூட்ரின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.  அதலைக்காயில் உள்ள சத்துக்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை சிறிது சிறிதாக உடைக்கும் வல்லமையை கொண்டுள்ளது.  அதனால் இந்த அதலைக்காயை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.

பெண்களை பாதுகாக்கும் கழற்சிக்காய்…!

புற்றுநோய் வராமல் தடுக்க: 

புற்றுநோய் வராமல் தடுக்க

 அதலைக்காயில் இருக்கும் லெய்ச்சின் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அதுமட்டுமில்லாமல், இது புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்க: 

உடல் எடையை குறைக்க

இதில்  நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது பசியை கட்டுப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. அதலைக்காயில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement