பீட்ரூட் ஜூஸின் பயன்கள்..! Beetroot Juice Uses..!

beetroot juice benefits in tamil

பீட்ரூட் ஜூஸ் தரும் நன்மைகள்..! Beetroot Juice In Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பீட்ரூட் ஜூஸ்(beetroot juice benefits in tamil) தரும் நன்மை மற்றும் பயன்களை இன்று படித்து தெரிந்துகொள்ளுவோம். பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. நமது உடலில் நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலை பெற்றது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த பீட்ரூட் ஒரு சிறந்த காய்கறி வகை ஆகும். சரி வாங்க இந்த பீட்ரூட் ஜூஸ் குடிப்பதனால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்…!

இரத்த சோகை குணமாக பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். பீட்ரூட்டில் இரும்பு சத்து, வைட்டமின் 12, போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் கண்டிப்பாக இரத்த சோகை குணமாகும்.

கல்லீரல் குணமடைய பீட்ரூட் ஜூஸ்:

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பீட்ரூட் ஜுஸில் இருக்கும் குழுக்காத்தையனின் என்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் கல்லீரலில் உள்ள பிரச்சனையை தடுக்கும். அதோடு உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்யவும் இந்த பீட்ரூட் ஜூஸ் உதவியாக இருக்கிறது.

இந்த கல்லீரல் குணமாக வாரத்தில் இரண்டு முறை இந்த ஜூஸ் குடித்து வந்தால் போதுமானது.

இரத்த ஓட்டம் சீராக இருக்க பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராகவும் இருக்கும். பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரைட் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டும் இல்லாமல் இரத்த குழாயில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். இரத்த ஓட்டம் சீராக இல்லாதவர்கள் இந்த பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.

உடல் நச்சுக்களை அகற்றும் பீட்ரூட் ஜூஸ்:

நமது உடலில் டாக்ஸின்ஸ் என்ற நச்சு அதிகமாக இருப்பதனால் தான் உடலில் ஏராளமான நோய்கள் வருகின்றது. இது போன்ற டாக்ஸின்ஸ்களை அகற்றும் தன்மை பீட்ரூட் ஜீஸிற்க்கு உள்ளது. பீட்ரூட்டில் இருக்கும் பீட்டாலைனின் என்ற வேதிப்பொருள் உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றி உடலை சுத்தமாக வைத்திருக்கும்.

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..!

புற்றுநோயை குணப்படுத்தும் பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் புற்றுநோய் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும். அதோடு புற்றுநோய் உண்டாகக்கூடிய ஆரம்ப பிரச்சனையையும் சரி செய்யும்.

உடல் எடை குறைக்க பீட்ரூட் ஜூஸ்:

இந்த பீட்ரூட் ஜுஸில் கலோரிஸ் தன்மை குறைவாகவே உள்ளது. நார்ச்சத்துகள் அதிக தன்மை கொண்டுள்ளது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வரலாம்.

உடலில் இருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஸ்லிம்மாக பீட்ரூட் ஜூஸ் வைத்திருக்கும்.

இருதய பிரச்சனை சரியாக பீட்ரூட் ஜூஸ்:

இரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறையும் போது இருதயத்தில் படபடப்பு தன்மை, உடலில் ஏற்படும் சோர்வு, மூச்சு பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனை வருகிறது. இந்த பீட்ரூட் ஜூஸ் பொட்டாசியத்தின் அளவை சீராக வைத்திருக்கும். அதுமட்டும் இல்லாமல் இருதயம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

பீட்ரூட் ஜூஸ் உடலில் உள்ள இரத்த குழாய்களில் படிந்து இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்துவிடும். இருதய அடைப்பு, இருதய பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

குறிப்பு:

பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரைட், கால்சியம், காப்பர், செலினியம், சிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ் போன்ற சத்து வகைகள் நிறைந்துள்ளது.

பழங்களும் அதன் மருத்துவ பயன்களும் (Fruits Benefits In Tamil)..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்