காலையில் இந்த உணவையா நீங்கள் சாப்பிடுறீர்கள் அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள் ..!

best food for morning empty stomach in tamil

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

வணக்கம் ஆரோக்கியம் நண்பர்களே..! தினமும் காலையில் எழும்பும் போது ஒவ்வொருவரும் இனிமையான காலை பொழுதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அத்தகைய காலை பொழுதில் வெறும் வயிற்றில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் அனைவர்க்கும் இருக்கிறது. உங்களின் குழப்பத்திற்கு இன்றைய பதிவு உதவியானதாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று இன்றைய பதிவை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை:

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகளின் பட்டியல்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • தேன் 
  • பாதாம் 
  • பப்பாளி 
  • தர்பூசணி 
  • பச்சை பயிறு 
  • சியா விதைகள் 
  • பழைய சாதம்

வெறும் வயிற்றில் தேன்:

தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் தேனை சூடு தண்ணீரிலில் கலந்து குடிக்கவும். இது மாதிரி தேனை வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்து தேவையில்லாத கழிவுகளை வெளியேற்ற செய்கிறது.

வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடலாமா:

பாதாமை தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் பாதம் மேல் உள்ள தோலை நீக்கி விட்டு வெறும் வயிற்றில் பாதாமை மட்டும் சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடலாமா:

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடலாமா

பப்பாளி செரிமான பிரச்சனை, மலசிக்கல் மற்றும் குடல் இயக்கத்தை சரியாக இயங்க செய்வது போன்ற அனைத்திற்கும் சிறந்த பலனை தருவதால் வெறும் வயிற்றில் பப்பாளியை காலையில் சாப்பிட வேண்டும். அதுபோல பப்பாளி இதயத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியதாகவும் இருக்கிறது.

தர்பூசணி:

தர்பூசணி

கோடை காலத்தில் அனைவரும் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு பழம் தர்பூசணி. இந்த தர்பூசணியில் 90 சதவிகிதம் நீர்சத்து இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் கோடை காலத்தில் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

பச்சை பயிறு:

பச்சை பயிறு

பச்சை பயிரை அப்படியே சாப்பிடாமல் முளைகட்டிய  பிறகு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.  இந்த முளைகட்டிய பச்சை பயிரில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் B, வைட்டமின் C மற்றும் வைட்டமின் K போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் உடலை ஆரோக்கியமாக வைக்கவும் தேவையில்லாத கழிவுகளையும் வெளியற்றவும்  உதவுகிறது.

சியா விதைகள்:

சியா விதைகள்

சியா விதையில் புரோட்டீன், கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. அதனால் சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு தண்ணீரில் கலந்தோ அல்லது பழத்தின் மீது தூவியோ வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சியா விதைகளை இப்படி சாப்பிடுவதால் உடல் எடை குறைவு மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கவும் பயன்படுகிறது. 

பழைய சாதம் சாப்பிடலாமா:

பழைய சாதம் சாப்பிடலாமா

சாதம் மீந்து விட்டால் அதில் தண்ணீரில் ஊற்றி மறுநாள் காலையில் அதனை பழைய சாதமாக சாப்பிடுவார்கள். அத்தகைய பழைய சாதத்தில் பலவகையான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் பழைய சாதம் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தக்கூடியது.

இதையும் படியுங்கள்⇒ தினமும் அவித்த முட்டை சாப்பிடலாமா.! அப்படி சாப்பிட்டால் உடல் என்ன ஆகும் தெரியுமா ..!

இதுபோன்ற மேலும் பல ஆரோக்கியகுறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..!