சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த காய்கறிகளை தவறாமல் சாப்பிடுங்கள்..!

Advertisement

Best Vegetables For Diabetic Patients in Tamil

இன்றைய ஆரோக்கியம் பதிவில் சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அனைவருக்குமே உடல் ஆரோக்கியத்தின் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். நம் உடம்பில் எந்தவொரு நோயும் வராமல் இருப்பதற்கு நாம் தினமும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதுபோல சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

நீரிழுவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

நீரிழுவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்:

பாகற்காய்: 

பாகற்காய் பயன்கள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு பாகற்காய் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. பாகற்காயில் Keratin Polypeptide என்ற பொருள் இருப்பதால் அது உடம்பில் இன்சுலின் சுரக்கும் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரம் 1 முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டுங்கள்.

வெண்டைக்காய்: 

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின், போலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெண்டைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இது நீரழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஒரு அருமருந்தாக இருக்கிறது. அதனால் வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

கர்ப்பகால சர்க்கரை நோய் வர காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்..!

காலிஃபிளவர்: 

காலிஃபிளவர் பயன்கள்

இதில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஃபைபர் மற்றும் வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. காலிஃபிளவரில் இருக்கும் சத்துக்கள் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. அதனால் நீரிழுவு நோயாளிகள் காலிஃபிளவரை வாரத்திற்கு 1 முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

முட்டைகோஸ்: 

முட்டைகோஸ் பயன்கள்

முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள், வைட்டமின் சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் இருக்கும் வைட்டமின் A மற்றும் வைட்டமின் K சத்துக்கள் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் முட்டைகோஸை தவறாமல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்.

கேரட்: 

கேரட்

கேரட்டில் கால்சியம், வைட்டமின் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் இன்சுலின் அளவை குறைத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

சர்க்கரை நோய் குணமாக இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள் போதும்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement