இந்த ஒரு பொருளில் இவ்வளவு நன்மைகளா..? கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?

Black Dry Grapes Benefits in Tamil

கருப்பு உலர் திராட்சை நன்மைகள் | Black Dry Grapes Benefits in Tamil..!

வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் ஆரோக்கியமான தகவல் ஒன்றை பற்றி பார்க்க போகிறோம். நாம் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவோ பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். அப்படி ஒரு உணவு பொருள் தான் கருப்பு உலர் திராட்சை. இந்த கருப்பு உலர் திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்வோம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பச்சை திராட்சை நன்மைகள்

கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

கருப்பு உலர் திராட்சை

நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஓன்று சத்தான உணவு பொருட்கள் தான். தினமும் நாம் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் உடல்நல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கலாம். இந்த கருப்பு உலர் திராட்சையில் அதிகம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி பொட்டாசியம், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் இரவில் 6 கருப்பு உலர் திராட்சையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு எண்ணற்ற பலன்களை கொடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

இந்த கருப்பு உலர் திராட்சையில் வைட்டமின் B  மற்றும் வைட்டமின் C அதிகம் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த கருப்பு உலர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இது தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைகிறது.

திராட்சை பழம் நன்மைகள்

இரத்த சோகையை போக்க:

இந்த கருப்பு உலர் திராட்சைகளை ஊறவைத்து சாப்பிடுவதால் இரத்த சோகையை எதிர்த்து போராடுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் இரத்தம் சுரக்க பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது இரத்ததை சுத்தப்படுத்துகிறது. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இந்த கருப்பு திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் நல்ல பலன் அளிக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த:

இதில் அதிகளவு இரும்புசத்து இருப்பதால் இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த கருப்பு உலர் திராட்சையில் பாஸ்பரஸ் மற்றும் போரான் கால்சியம் போன்ற கனிமச்சத்துக்கள் இருப்பதால் இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இந்த கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் கை மற்றும் கால் வலி போன்ற எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

கண்களை பாதுகாக்க:

ஊறவைத்த திராட்சைகளில் பாலிஃபீனால்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்கள் என்ற ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் இருப்பதால் இது கண்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதுமட்டுமின்றி கண்புரை மற்றும் கண்கள் தொடர்பான உபாதைகள் வராமல் தடுக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்