அவரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! | Broad Beans Benefits in Tamil

Advertisement

Broad Beans Benefits in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது அவரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தான். நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் அவரைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி நம்மில் சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு தெரிந்திருக்காது. அப்படி அவரைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி தெரியாதவர்களுக்காகத்தான் இன்றைய பதிவு. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

அவரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

Broad beans uses in tamil

நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும் அது ஒரு பீன்ஸ் அல்லது பட்டாணி வகையைச் சார்ந்த தாவரமாகும். அவரை மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது.

அவரைக்காய் சுவையான உணவு என்பதை தவிர தனக்குள் பல மருத்துவ குணங்களையும்  கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை காணலாம்.

இதயத்திற்கு நல்லது:  

Broad beans in tamil

பொதுவாக நாம் உண்ணக்கூடிய 1/4 கப் அவரையில் 9 கிராம் அளவிற்கு கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. அதனால் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் நமது இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் செயல்பட உதவுகிறது.

எடை குறைய:

Broad beans meaning in tamil

பொதுவாக நாம் உண்ணக்கூடிய 1/4 கப் அவரையில் 10 கிராம் அளவுக்கு புரதச்சத்து இருப்பதால் அவரைக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வதினால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைகிறது. அதனால் உடல் எடையும் குறைகிறது என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.

நோய் எதிர்ப்புசக்தி :

Avarakkai benefits tamil

அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் புற்றுநோய் போன்ற பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

இரத்த அணுக்களை அதிகரிக்கிறது:

Avarakkai in tamil

இதில் உள்ள அதிகபடியான இரும்புச் சத்து நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மிகவும் உதவுகிறது.

மலச்சிக்கல்:

Avarakkai health benefits in tamil

அவரையில் உள்ள நார்ச்சத்து நாம் உட்கொள்ளும் உணவினை நன்கு செரிமானம் செய்து மலச்சிக்கல் பிரச்சனை நீங்குகிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கு :

Benefits of eating avarakkai in tamil

பொதுவாக நமது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் கால்சியம் அவரைக்காயில் உள்ளது.

நுரையீரலுக்கு நல்லது:

Benefits of broad bean in tamil

பொதுவாக நமது நுரையீரலிலிருந்து மற்ற செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு இரும்புச் சத்து மிகுந்த ஹீமோகுளோபின் உதவுகிறது. அவரையில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாடித்தோட்டத்தில் இன்று அவரைக்காய் பயிரிடுவோமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement