Advertisement
ப்ரோக்கோலி நன்மைகள் | Broccoli Uses in Tamil
அதிகமான சத்து நிறைந்துள்ள காய்கறிகளில் ப்ராக்கோலியும் உள்ளது. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவில் அதிக அளவு ப்ராக்கோலியை பயன்படுத்தி வந்தனர். முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்தது. இந்த ப்ரோக்கோலியில் பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் அப்படி என்ன சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சத்துக்கள்:
- வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K , செலினியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
செல்களை பாதுகாக்க:
- Broccoli Health Benefits in Tamil: இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் எனப்படும் Molecule உடலில் ஏற்படும் செல் சேதத்தை தடுக்கிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் உதவுகிறது.
கொலஸ்ட்ரால்:
- Broccoli Benefits in Tamil: இப்பொழுது உள்ள மக்கள் அனைவரும் கொலஸ்ட்ரால் உடம்பில் சேரமால் இருக்க வேண்டும் என்று சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்றாக இந்த ப்ரோக்கோலி உள்ளது.
- இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் உணவில் இருக்கும் கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேற செய்கிறது.
செரிமான பிரச்சனைக்கு:
- ப்ரோக்கோலி பயன்கள்: மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவாக இந்த ப்ரோக்கோலி இருக்கிறது.
- உணவு செரிமானம் அடைய உதவும் அமிலங்களின் செயல்பாட்டை அதிகரித்து செரிமான பிரச்சனையை சரி செய்கிறது.
எலும்பு வளர்ச்சிக்கு:
- Broccoli Uses in Tamil: எலும்பு வளர்ச்சி பெறுவதற்கு வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். எலும்பு வலுப்பெறாமல் இருந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புள்ளது.
- ப்ரோக்கோலியில் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் k அதிகமாக உள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த காய்கறியை உணவில் எடுத்து கொள்வது நல்லது.
புற்றுநோய்:
- Broccoli Benefits in Tamil: புகையிலை பிடிப்பதாலும் மற்றும் பல காரணங்களாலும் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது.
- ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் இருப்பதால் புற்றுநோய் வராமலும், புற்றுநோய் செல்லின் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோய்:
- ப்ரோக்கோலி பயன்கள்: இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும், சீராக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.
நினைவாற்றல் அதிகரிக்க:
- Broccoli Uses in Tamil: வயது முதிர்ச்சியின் காரணமாக சிலருக்கு நினைவாற்றல் குறைய ஆரம்பித்து விடும். நினைவாற்றல் அதிகரிக்க ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 இருப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கு பெரிதும் உதவுகிறது.
சருமத்திற்கு:
- Broccoli Benefits in Tamil: இளமை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஆசை தான். ப்ரோக்கோலியில் இருக்கும் குளூக்கோராஃபானின் சருமத்தில் உள்ள செல்களை சேதத்தில் இருந்து பாதுகாத்து வயது முதிர்வை தடுக்க உதவுகிறது.
நரம்பு மண்டலத்திற்கு:
- ப்ரோக்கோலி பயன்கள்: நரம்பு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ப்ரோக்கோலியில் இருக்கும் பொட்டாசியமும், மெக்னீசியமும் உதவுகிறது.
பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |
Advertisement