காலிபிளவரை சாப்பிடுவதற்கு முன்பு நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

cauliflower benefits in tamil

Cauliflower Benefits in Tamil

நாம் தினமும் சாப்பிட கூடிய காய்கறிகளில் உடலுக்கு அதிகமான சத்துக்களை தரக்கூடிய காய்கள் என்ன என்பதை பார்த்து பார்த்து வாங்கி சமைத்து சாப்பிடுகிறோம். இது மாதிரி என்ன தான் நாம் பார்த்து வாங்கி சாப்பிட்டாலும் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அளவுக்கு மிஞ்சீனால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ற வாறு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் அதை அளவோடு எடுத்துக்கொள்வது நமது உடம்பிற்கு நல்லது. அந்த வரிசையில் இன்று காலிபிளவரில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மை, தீமை போன்றவற்றை விரைவாக இன்றைய பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

காலிபிளவரில் உள்ள சத்துக்கள்:

நாம் சாப்பிடும் காலிபிளவரில் 11 வகையான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.

 • வைட்டமின் B6
 • வைட்டமின் C
 • வைட்டமின் D
 • வைட்டமின் K
 • பாஸ்பரஸ் 
 • பொட்டாசியம் 
 • மாங்கனீசு 
 • மெக்னீசியம் 
 • கலோரிகள் 
 • போலேட் 
 • நார்ச்சத்து 
கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

காலிபிளவர் பயன்கள்:

காலிபிளவர் பயன்கள்

காலிபிளவரில் சல்போராபேன் என்னும் வேதிப்பொருள் இருப்பதால் இதை நாம் தினமும் சாப்பிடும்போது எந்த விதமான புற்றுநோயும் வரமால் தடுக்கிறது. 

காலிபிளவரில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. ஆகையால் தினமும் நாம் சாப்பிடும் காயுடன் காலிபிளவரை சேர்த்து சாப்பிட்டால் இதயம் சம்மந்தமான நோய்கள் தடுக்கவும் மற்றும் இரத்தில் உள்ள கொழுப்பினை வெளியற்றவும் உதவுகிறது.  

கர்ப்பிணி பெண்கள் காலிபிளவரை சாப்பிட்டால் அதில் இருக்கும் வைட்டமின் D சத்து வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.

மறதி நோய் உள்ளவர்கள் காலிபிளவரை சாப்பிட்டால் ஞாபக சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

கை வலி, கால் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் காலிபிளவரை சாப்பிட்டால் விரைவில் உடம்பில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து விடுப்பட முடியும். 

இந்த காலிபிளவரை உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து விடும். 

காலிபிளவர் தீமைகள்:

காலிபிளவர் தீமைகள்

காலிபிளவரை அதிகமாக சாப்பிட்டால் அதில் இருக்கும் கார்போஹைரேட் நமது உடலில் செரிமான கோளாறு, வயிற்று வலி மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அளவுக்கு அதிகமாக நாம் காலிபிளவரை சாப்பிடும்போது அதில் உள்ள சில தீமை விளைவிக்க கூடிய வேதிப்பொருட்கள் நமது உடலில் யூரிக் அமிலமாக மாறி கிட்னியில் கல் உருவாக வழிவகுக்கும்.

இரத்தம் உறைதல் குறைவாக உள்ளவர்கள் காலிபிளவரை சாப்பிடக் கூடாது.

பாகற்காயை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

காலிபிளவர் சாப்பிட வேண்டியவர்கள்:

 • அதிக உடல் எடை உள்ளவர்கள் 
 • உடம்பில் வலி மற்றும் வீக்கம் உள்ளவர்கள் 
 • ஞாபக சக்தி இல்லாதவர்கள்
 • இரத்த ஓட்டம் குறைவாக உள்ளவர்கள்
 • ஹார்மோன் வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள்

உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் அதை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலிபிளவரை சாப்பிடக்கூடாதவர்கள்:

 • அலர்ஜி உள்ளவர்கள் 
 • செரிமான பிரச்சனை உள்ளவர்கள்
 • வாதம் உள்ளவர்கள் 
 • தைராய்டு உள்ளவர்கள் 

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனை படி சரியான அளவு காலிபிளவரை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்