செர்ரி பழம்
அனைவருக்கும் பிடித்த பழங்களில் செர்ரி பழமும் ஒன்று. இந்த பழத்தை தனியாக வாங்கி சாப்பிடுவதை விட கேக்குகள் மற்றும் இனிப்பு நிறைந்த உணவுகளில் சேர்த்திருப்பரகள். இதை தான் அதிகம் வாங்கி சாப்பிடுவார்கள். இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கும் மட்டுமில்லாமல் முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றது. மேலும் இந்த பழத்தினை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செர்ரி பழம் என்றால் என்ன.?
இந்த பழம் கல் பழங்களை சேர்ந்த வகையாகும். ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த பழத்தை பழுக்க வைக்கும் நிலையை பொறுத்து அதனின் சுவை புளிப்பு, இனிப்பு என வேறுபாடு அடைகின்றது. பெரும்பாலும் இந்த பழத்தை கேக்குகள் மற்றும் இனிப்பு நிறைந்த உணவு பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படியுங்கள் ⇒ கிவி பழம் நன்மைகள்
செர்ரி பழத்தில் உள்ள சத்துக்கள்:
1 கப் பச்சை மற்றும் இனிப்பு செர்ரி பழத்தில் உள்ள சத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- கலோரிகள் – 86.9
- கார்போஹைட்ரேட்டுகள் – 22.1 கிராம்
- நார்சத்து – 2.9 கிராம்
- சர்க்கரை – 17.7 கிராம்
- வைட்டமின் சி – 16 %
- வைட்டமின் கே – 4%
- பொட்டாசியம் – 9%
- மாங்கனீசு – 5 %
- இரும்புசத்து – 3%
- கால்சியம் -2%
- மெக்னீசியம் – 4%
ஒரு நாளைக்கு எவ்வளவு செர்ரி பழம் சாப்பிடலாம்:
இந்த பழத்தில் அதிகளவு நன்மைகள் இருந்தாலும் ஒரு நாளைக்கு 100 கிராம் மட்டும் தான் எடுத்து கொள்ள வேண்டும்.
செர்ரி பழம் நன்மைகள்:
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்த:
செர்ரி பழத்தில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்க உதவுகிறது. குறிப்பாக நீங்கள் செர்ரி பழத்தை தினமும் சாப்பிடும் பொழுது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்த உதவுகிறது.
மூட்டு வலி, தசை வலி நீங்க:
செர்ரி பழமாக எடுத்து கொண்டாலும் சரி, ஜூஸாக எடுத்து கொண்டாலும் சரி மூட்டு வலி மற்றும் தசை வலி நீங்க உதவுகிறது.
மலச்சிக்கலை தவிர்க்க:
செர்ரி பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனையை சரி செய்து மலசிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.
முடி வளர்ச்சிக்கு:
முடியின் வளர்ச்சிக்கு செர்ரி பழம் உதவுகிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் முடியை வலிமையாக்க உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடியை வளர்ச்சி அடைய செய்கிறது.
சரும பாதுகாப்பிற்கு:
சிவப்பு செர்ரி பழத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ சத்து பாக்டிரியாவிலுருந்து எதிர்த்து போராடி சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
இந்த பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
புற்று நோய் வராமல் தடுக்க:
இந்த பழத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகமாக இருப்பதால் புற்று நோய் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு:
இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சமமாக வைத்து கொள்ள உதவுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ தலைமுடி வளர்ச்சிக்கு முட்டையை இப்படி பயன்படுத்துங்கள்..!
இதுபோன்ற மேலும் பல ஆரோக்கியகுறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..! |