சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்காம் பதிவில் எல்லாருக்கும் பிடித்த சைக்கிள் பற்றித் தான் பார்க்கப்போகிறோம். நம் வாழ்க்கையில் முதல் முதலில் ஓட்டி பழகிய வாகனம் சைக்கிள் தான். அந்த காலகட்டத்தில் பொதுவாக எல்லோரும் உபயோகித்து வந்த ஒரு மிதிவண்டி தான் சைக்கிள். கிராமத்தில் வசிப்பவர்கள் நகரத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் கிடையாது. அன்றைய காலகட்டத்தில் எல்லோரும் கிராமம், நகரம் என வேறுபாடுன்றி எல்லோரும் சைக்களில் தான் பயணித்து வந்தனர். சைக்களில் பயணம் செய்வதற்கு பணம் தேவையில்லை என்றாலும் இது உடலிற்கு நல்ல ஒரு உடல்பயிற்சி ஆகவும் இருந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பைக் கார் எல்லாம் வந்தவுடன் சைக்கிளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. பெட்ரோல், டீசலின் விலை அதிகரிப்பதனால் மீண்டும் இளம் தலைமுறையின் கவனம் சைக்களின் மீது திரும்பி உள்ளது. மேலும் சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க……..
சைக்கிள் பாகங்கள் தமிழில் |
சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகளும் குணமாக்கும் நோய்களும்:
தினம்தோறும் சைக்கிள் ஓட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதுமட்டுமில்லாமல் உடலிற்கும் மனத்திற்கும் ஏராளமான நன்மைகளையும் தருகின்றது. சர்க்கரை நோய், இருதய நோய், உடல் பருமன் போன்ற எல்லாம் பிரச்சனைகளுக்கும் சைக்கிள் ஓட்டுவதால் தீர்வு கிடைக்கிறது. அதுமட்டுமின்றி சைக்கிள் ஓட்டுவதால் சுற்றுசூழலையும் பாதுகாக்கின்றது. மேலும் அதன் நன்மைகளை தெளிவாக காண்போம்.
- தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால் மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து உடலிற்கு சுறுசுறுப்பு உண்டாகும்.
- சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், எலும்பு பகுதிகள், முதுகு தண்டுவடம், இடுப்பு பகுதிகள் ஆகியவை வலுப்பெறும்.
- மனச்சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
- சைக்கிள் ஓட்டும் பொழுது அதிகம் வியர்வை வெளியேறுவதால் இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கின்றது.
- சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடல் எடையை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல் புற்றுநோய் வருவதையும் தடுக்கின்றது.
- காலை எழுந்ததும் சைக்கிள் ஓட்டுவதால் இரத்தஅழுத்தம் சம்மந்தப்பட்ட எந்த விதமான நோய்களும் வராது.
- சைக்கிள் ஓட்டும் பொழுது இதயத்தின் துடிப்பு சீராக செயல்படுவதால் இதய அடைப்புகள் பிரச்சனைகள் எதுவும் வராது.
- சர்க்கரை நோயாளிகள் தினமும் சைக்கிள் ஓட்டுவதால் சர்க்கரையின் அளவும் கலோரிகள் அளவு கட்டுக்குள் இருக்கும்.
- தினமும் சைக்கிள் மிதிக்கும் பொழுது உடலில் இரண்டாம் இதயம் என்று சொல்லக்கூடிய Calf Muscle (கெண்டைக்கால் தசை) பலம்பெற்று உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி இதயத்தின் ஆயுள் காலத்தை நீடிக்கும்.
- சைக்கிள் ஓட்டும்பொழுது பல்வேறு சூழ்நிலைகளில் இயற்கையோடு பயணிக்கும் பொழுது மனத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கக்கூடிய Dopamine Hormone அதிகப்படுத்தி Cortisol கட்டுப்படுத்தி நாள் முழுவதும் மகிழ்ச்சியா இருப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
- சர்க்கரை நோயாளிகள் தினம் தோறும் சைக்கிள் ஓட்டுவாதல் இன்சுலின் சுரப்பி சுரப்பதையும் மேம்படுத்தி கொள்கின்றது.
- சைக்கிள் ஓட்டும்பொழுது கை, கால், வயிற்றுப்பகுதி, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து உடல் அழகுபெறும்.
- சுவாச உறுப்புகளை பலப்படுத்தும் சைக்கிள் ஓட்டும் பொழுது நுரையீரலின் இயக்கம் அதிகரிக்கும் பொழுது சுவாசிக்கும் திறனும் அதிகரிக்கும்.
- மூட்டு தேய்மானம், மூட்டுவலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு சைக்கிள் ஒரு மருந்தாக இருக்கிறது.
- ஆண்களுக்கு எலும்புகள் வலுப்பெறுவதற்கும், உடல் பயிற்சிக்கும் சைக்கிள் ஒரு இன்றியமையாத வாகனமாக இருக்கின்றது.
- தினமும் சைக்கிள் ஓட்டுவதால் உடலில் உள்ள கழிவுகளின் அளவு வெளியேற்றப்பட்டு Metabolism அளவு அதிகரிக்கும்.
- பெண்களுக்கு ஏற்பட கூடிய மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த தீர்வு.
- குழந்தை பெற்ற பெண்களுக்கு ஏற்படக்கூடிய சிறுநீர் கசிவு போன்ற பிரச்சனைகளை குணமாக்குவதற்கும் சைக்கிள் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.
- சைக்கிள் ஓட்டுவதால் ஆயுளை அதிகரிக்க செய்யும் .
- வளரும் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதால் வளர்ச்சி அதிகரிப்பதோடு, பசி எடுக்கவும் உதவிபுரிகிறது. பொதுவாக வளர்ச்சி இல்லாதவர்கள் கூட சைக்கிள் ஓட்டுவதால் கால் தசையின் வளர்ச்சி அதிகரித்து வளர்வதற்கும் உதவி செய்கின்றது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |