டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவான டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றித்தான். பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் என்றால் அது சாக்லேட் தான். மேலும் ஒரு சிலரால் ஒரு நாள் கூட சாக்லேட் சாப்பிடாமல் இருக்க முடியாது குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பருவ பெண்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். அப்படி அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் டார்க் சாக்லேட்டில் நிறைந்துள்ள பல நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.
சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி
Dark Chocolate சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்:
இதயத்திற்கு நல்லது:
டார்க் சாக்லேட்டை வாரத்தில் இரண்டு மூன்று முறை சாப்பிட்டு வருவதால் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இரத்த அழுத்தம் குறைகிறது. இதனால் நமது இதயம் நன்கு செயல்பட உதவுகிறது என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.
அதிலும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், தமனிகள் கடினமாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் கூறுகின்றன.
மூளைக்கு நல்லது:
டார்க் சாக்லேட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் மூளைக்கு நன்கு சிந்திக்கும் திறனை அளிப்பது மட்டுமில்லாமல் அது நன்கு செயல்பட அதிக ஆற்றலையும் அளிக்கிறது. இதன் மற்றொரு பயனாய் நமது அறிவுத்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது:
நமது உடலின் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள டார்க் சாக்லெட் உதவுகிறது. சர்க்கரை நோயின் இரண்டாம் நிலையை போக்கவும் இந்த டார்க் சாக்லேட் உதவி புரிகின்றது. மேலும் இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் (Flavonoids) உடலில் உள்ள செல்களை சீராக செயல்பட உதவுகின்றது.
இதில் குறைந்த அளவு க்ளைசீமிக் இன்டெக்ஸ் (Glycemic index) இருப்பதால் உடலில் இன்சுலின் அளவை கூட்டி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது.
புற்றுநோயை தடுக்கும் டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லெட்டில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் உள்ளது. இதனால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை (Radicals) போக்கி செல்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. இந்த ரேடிக்கல்களால் புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது. ஆனால் இதை டார்க் சாக்லெட் முற்றிலும் குணப்படுத்துகின்றது. மேலும் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.
மிகுதியான ஊட்டச்சத்து :
டார்க் சாக்லெட்டில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்து போன்ற மிகுதியான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியத்தை பெற முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் வேறு சில சத்துக்களும் நிறைந்துள்ளன.
அவை பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை ஆகும். பொட்டாசியம் மற்றும் காப்பர் இதயத்திற்கு நல்லது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை போக்க உதவுகிறது.
பல் பிரச்சனையை போக்கும்:
டார்க் சாக்லெட்டில் உள்ள தியோபுரோமின் பற்களில் உள்ள எனாமல் தன்மையை பலப்படுத்த உதவுகிறது. அதவாது மற்ற இனிப்பை போன்று இவை பற்குழியை ஏற்படுத்தாது. ஆனால் சாக்லெட் சாப்பிட்டவுடன் நன்றாக வாய் கொப்பளிப்பது நல்லது. குறிப்பாக இந்த தியோபுரோமின் சளியையும் குணப்படுத்தும்.
கொழுப்பு குறைய மற்றும் உடல் எடை குறைக்க:
டார்க் சாக்லேட்டின் மூலம் நாம் அடையும் மற்றொரு சிறந்த நன்மை என்னவென்றால், நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து உடல் நலத்தை ஆரோக்கியமடைய செய்கிறது.
பொதுவாக சாக்லேட் உண்பதன் மூலம் நீங்கள் பசி அடங்கியதாய் உணர்வீர்கள். அதன் பின்னர் நீங்கள் சிறிதளவு உணவு உட்கொள்வதன் மூலம் உங்களது உடல் எடையை வெகுவாகக் குறைக்க உதவும். மாறாக நீங்கள் சாக்லேட் சாப்பிட்ட பிறகு நிறைய உணவு உட்கொள்வதன் மூலம் உடல் எடையில் எந்த மாற்றமும் இருக்காது.
மாரடைப்பு:
டார்க் சாக்லேட் உட்கொள்வதன் மூலமாக மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்களில் இருந்து நாம் பாதுகாப்பாய் இருக்க முடியும். முக்கியமாக இது மாரடைப்பு வரும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.
சருமம்:
டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைகிறது என்றும் மேலும் இது நமது முகம் பிரகாசமாய் இருப்பதற்கு பயனளிப்பதாய் கூறப்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் மனக் கவலை :
தினசரி சாக்லேட் உண்பதன் மூலம் மன அழுத்தமும், பதட்டமும் குறைகிறது என உலக அளவில் கருதப்படுகிறது. பொதுவாக சோர்வாக அல்லது மனக்கவலையில் உள்ளவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்ல பயனை அளிக்கிறது. ஏனெனில், இது நமது மனநிலையை சீராக வைக்க உதவுகிறது.
நாட்டு சர்க்கரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |