நம் உடலில் ஏற்படும் நோய்களும் அதன் அறிகுறிகளும்..!

Advertisement

நோய்களும் தடுக்கும் முறைகளும் – Udal Arokiyam Tamil Tips..!

Diseases and treatment in tamil:– பொதுவாக நம் உடலில் ஏதாவது நோய் ஏற்படுவதற்கு முன், நம் உடலில் சில வகையான அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகளை வைத்து உடலில் என்ன பிரச்சனை என்று தெரிந்து அதற்கான சிகிச்சை முறைகளை நாம் மேற்கொள்வதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம். அந்த வகையில் நம் உடலில் ஏற்படும் நோய்களும் அதன் அறிகுறிகளும் அதற்கு என்ன வைத்தியம் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

newஉடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிமுறைகள் !!!

நோய்களும் அதன் அறிகுறிகளும்..! Diseases and Treatment..!

வெளுத்த நகங்கள் எந்த நோய்க்கான அறிகுறி:-

ஒருவருக்கு இரத்த சோகை இருக்கிறது என்றால் அவர்களுக்கு கை விரல்களின் நகங்கள் வெளுத்து காணப்படும்.

அதாவது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவு குறையும்போது சிறிய வேலையைச் செய்வதற்குக்கூட உடல் பலமின்றி காணப்படும்.

இதற்கான வைத்தியம்:-

இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள உணவுகளை அதிகளவு உட்கொள்வதன் மூலம் உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

எனவே ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும் அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

நகங்களில் குழி விழுந்தால் என்ன வியாதி:-

சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகங்களில் குழி விழும். இது மிகவும் மோசமான தோல் நோய் என்று சொல்லலாம்.

இந்த தோல் நோய் காரணமாக தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

இந்த தோல் நோய் பிரச்சனைக்கு உடனடியாக சரும நோய் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறவேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே இந்த பிரச்சனை அதிகமாவதைத் தடுக்கலாம்.

சிவந்த உள்ளங்கை:-

உள்ளங்கை சிவந்து காணப்பட்டால் தங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும். நம் உடலில் கல்லீரல் பாதிக்கப்படும் போது, நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாக மாறும்.

கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென்று காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

இதற்கான மருத்துவம்:-

கீழாநெல்லியை வாரத்தில் ஒரு முறை உட்கொள்வதினால் கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.

newசைனஸ் குணமாக சித்த மருத்துவம்..!

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது:-

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போகின்றது என்றால் தங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லை என்று அர்த்தமாகும். உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போகும்.

மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாக அமைகின்றது.

இதற்கான வைத்தியம்:-

நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பாகும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

கண்கள் உப்பியிருந்தால் என்ன பிரச்சையாக இருக்கும்?

சிறுநீரகம் மோசமான நிலையில் இருப்பதை குறிக்கின்றது, சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்கின்றது.

இந்த சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

இதற்கான மருத்துவ குறிப்பு:-

இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். அதேபோல் தினமும் அதிகளவு தண்ணீர் அருந்துவது சிறுநீரகம் சிறப்பாக வேலை செய்ய உதவும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement