கண்கள் பத்திரம்!!! செல்போன், டிவி, கம்ப்யூட்டர் இடைவிடாமல் பார்க்கிறீர்களா?

Dry Eyes Treatment in Tamil

கண்கள் பத்திரம்!!! செல்போன், டிவி, கம்ப்யூட்டர் இடைவிடாமல் பார்க்கிறீர்களா???

Dry Eyes Treatment in Tamil:- பொதுவாக உடல் வறட்சி ஏற்படுவது உண்டு, அது போன்று கண் உலர்ந்து வறட்சியாவதும் உண்டு. இவைதான் உலர் கண் நோய் என்றழைக்கப்டுகின்றது. இந்த உலர் கண் நோய் அதிக வெளிச்சம் கொண்ட திரைகளை ஓய்வில்லாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதினால் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, இதற்கான அறிகுறிகள், இதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பதை பற்றி இங்கு நாம் தெளிவாக படித்தறிவோம் வாங்க.

கண் துடிப்பு காரணம் மற்றும் கண் துடிப்பு நிற்க வைத்தியம்..!

உலர் கண் நோய் வர காரணங்கள்(Dry eyes reasons):-

Dry Eyes Treatment in Tamil:- இன்றைய தொழிநுட்பம் வாய்ந்த செல்போன், லேப்டாப், வண்ண விளக்குகள், தொலைக்காட்சி பெட்டியினை மணி கணக்கில் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதினால் நாம் கண்களை முறையாக சிமிடுவது இல்லை. இதன் காரணமாக கண்களில் போதுமான ஈரப்பதம் சுரக்காமல், உலர் கண் நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் காற்றில் பறக்கும் தூசிகள், மண் போன்றவை கண்களில் விழுவதினாலும், நீண்ட நேரம் காண்டாக்ட் லென்சுகளை பயன்படுத்துவதாலும் இந்த உலர் கண் நோய் ஏற்படுகின்றது.

உலர் கண் நோய் அறிகுறிகள்(Dry eyes symptoms):-

Dry Eyes Treatment in Tamil:- கண்கள் உறுத்தல், கண்களில் அரிப்பு, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் உலர் கண் நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.

மேலும் கண்களில் அளவுக்கு அதிகமாக நீர் வடிதல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டியது மிகவும் அவசியம்.

உலர் கண் நோய் தீர்வுகள்(Dry eyes natural remedies):-

Dry Eyes Treatment in Tamil:- கணினி, மடிக்கணினி, செல்போன், தொலைக்காட்சி பெட்டி, வண்ண விளக்குகளை அதிகநேரம் பார்க்காமல் இருக்கவும்.

இல்லையெனில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடம் கண்களை மூடி ஒய்வு எடுக்க வேண்டும்.

அடிக்கடி நாம் கண்களை மூடி திறக்க வேண்டும். அதாவது கண்களை சிமிட்டினாலே இந்த நோயில் இருந்து(Dry eyes remedy) நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

மேலும் ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும், என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கருவளையம் உடனே மறைய இதைவிட சிறந்த டிப்ஸ் வேறில்லை..!

மருத்துவர்களின் சிகிச்சை முறை / Dry Eyes Treatment in Tamil:-

Dry Eyes Treatment in Tamil:- மருத்துவரால் செய்யப்படும் உடல் பரிசோனைகள் மூலம் இந்த உலர் கண் நோய் கண்டறியலாம். இந்த பிரச்சனைக்கு பொதுவாக சோதனைகள் தேவையில்லை.

தூசுகள், புகைகள் உள்ள சூழ்நிலைகள் மூலம் கண்கள் வறட்சி அடைவதை தவிர்க்கலாம் மற்றும் வெயிலில் செல்லும் போது கண்களுக்கு கண்ணாடி அணிவதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம். கண் உலர் நோயின் அறிகுறிகளை பொறுத்து இதற்கான சிகிச்சை வேறுபடும்.

அதாவது கண்களில் விடும் சொட்டு மருந்துகள், கண்களின் வறட்சியை நீக்கி மென்மையாக்குவதற்கான களிம்புகள், கண்களில் உள்ள கட்டிகளை குறைப்பதற்கான மருந்துகள் போன்றவையெல்லாம் மருத்துவர்கள் இந்த பிரச்சனைக்கு(Dry Eyes Treatment in Tamil) அளிக்கும் சிகிச்சையாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Udal Nalam Health Tips