இரவில் சாப்பிட கூடாத உணவுகள்
ஹாய் நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் நம் உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடிய ஒரு செய்தியை பற்றி தான் இருக்கும். அதாவது நாம் தினம் தோறும் இரவு நேரங்களில் அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிட்டு வருகிறோம். ஆனால எப்போதாவது யோசித்தது உண்டா இந்த உணவுகள் நமக்கு நன்மையை அளிக்கிறதா இல்லை தீமையை விளைவிக்கிறதா என்று யோசித்தது இருக்கீர்களா? அப்படி யோசித்திருந்தால் இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் சரி இனி இதுபோன்ற உணவுகளை தவிர்த்து கொள்ளுங்கள். வாங்க அது என்ன பொருள் என்று தெரிந்துகொள்ளுவோம்..!
இரவில் சாப்பிட கூடாத உணவுகள்:
இரவு பால் குடிக்கலாம் ஆனால் அந்த பால் குடிக்கவும் நேரம் காலம் உள்ளது அது என்னவென்றால் இரவு 9 மணிக்கு மேலே பால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் பாலில் உள்ள லாக்டோஸ் செரிமானம் ஆக்குவதற்கு அதிக நேரம் எடுக்கும் அதனால் அதனை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
சாக்லேட் இரவில் சாப்பிடலாமா?
இந்த சாக்லேடில் அதிகம் சாக்ரின், காஃபின், சர்க்கரை, கொழுப்புச்சத்து உள்ளது இது உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்துவதால் தூக்கத்தை பாதிக்கிறது. அஜீரண கோளாறுகள் ஏற்படும்.
அசைவ உணவை இரவில் சாப்பிடலாமா:
இதில் அதிகளவு புரோட்டினும் கொழுப்புச்சத்து உள்ளது அதனால் இதுக்கு ஜீரணம் ஆக உடலில் ஆற்றல் தேவைப்படும் அது இரவு நேரங்களில் குறைவாக இருக்கும். அதனால் இரவு நேரங்களில் இறைச்சியை தவிர்ப்பது நல்லது.
இரவு நேரங்களில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்கவும். இதில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்திருக்கிறது. அதிக அளவு கலோரியை கொண்ட பாஸ்தா, உடலின் தசை செல்களுக்குள் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
தூங்கும் போது கீரையை உணவாக எடுத்துக்கொள்ள கூடாது. இதில் கலோரிகள் அதிகம் நிறைந்திருக்கிறது. அதனால் உடலுக்கு செரிமான சக்தியை குறைகிறது எனவே இரவில் தூக்கம் கெடும்.
அதேபோல் நீர் சத்துக்கள் நிறைந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். அதவாது பூசணி, புடலை, சுரக்காய், பாவைக்காய், கோவைக்காய், தர்பூசணி, செளசெள போன்ற நீர் சத்துக்கள் நிறைந்த பொருட்களை இரவில் உட்கொள்ள வேண்டாம்.
முக்கியமாக இரவில் பச்சை மிளகாயை சாப்பிடுவதை தவிர்க்கவும். உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். மிளகாயில் உள்ள அமினோஅமிலம், நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். பச்சை மிளகாயில் உள்ள புரோட்டீன் இரத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும்.
டீ காபி குடிப்பதனால் உடலில் முக்கியமாக தூக்கத்தை குறைக்கும். டீ, காபியில் உள்ள ‘கேஃபைன்’ வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும்.
துரித உணவுகள்:
இந்த உணவுகளில் அதிக அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவு கலோரி நிறைந்து இருக்கும். இது உடலில் செரிமான கோளாறுகளை அதிகமாக்கும். ஸ்பைசீ உணவில் உள்ள கார்போஹைட்ரேட், உடலின் இன்சுலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
அதேபோல் இரவில் கலர் பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும், நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று உபாதைகளை உருவாக்கும். அதனால் முற்றிலும் அதனை தவிர்ப்பது நல்லது.
உங்கள் நரம்புகள் பலம் பெற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |