வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

garlic benefits in tamil

காலையில் வெறும் வயிற்றில் 2 பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: 

ஹலோ பொதுநலம்.காமின் அன்பான நேயர்களே. இன்று நம் ஆரோக்கியம் பதில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தான்  பார்க்கபோகிறோம். வாங்க நண்பர்களே இதை சாப்பிடுவதால் உடலுக்கு  என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

நம் அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் உணவுகளில் பெரும்பாலும் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வருகிறோம். பூண்டு நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு  உணவு பொருளாக திகழ்ந்து வருகிறது. பூண்டு பற்களை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரியுமா? வாங்க இந்த பதிவின் மூலம் அதை பற்றி தெரிந்துகொள்வோம்.

பூண்டின் நன்மைகள் என்ன:

garlic benefits in tamil

பூண்டு பல்கலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான நன்மைகளை பெறமுடியும் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். பூண்டு பற்களை பச்சையாக வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் உங்கள் நாளை சில பூண்டு பற்களுடன் தொடங்குவது நன்மை பயக்கும் என்று கூறுகிறார்கள். நம் அன்றாட வாழ்வில் சமையலை பொருத்தவரை பூண்டு மிக முக்கியமான பொருளாகும்.

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் என்ன பலன் வறுத்த பூண்டு பயன்கள்

பச்சை பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்:

 • பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் காணப்படுகின்றது. “ஆன்டி மைக்ரோபியல்” பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற பண்புகள் காணப்படுகிறது.
 • பூண்டு கொலஸ்ட்ராலை கரைப்பதில் மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 • காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடும்போது நல்ல சீரண சக்தியை கொடுக்கிறது.
 • நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு இது உதவுகிறது. பூண்டு உங்க உடலிலுள்ள ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
 • காலையில் எழுந்ததும் பூண்டு சாப்பிடுவதால் செரிமானக்கோளாறுகள் வராமல் தடுக்கிறது. உங்கள் உடம்பிலுள்ள கொழுப்புகளை கரைத்து உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.

 • பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுவதால் உடம்பில் ரத்த அழுத்தம் குணமாகிறது. இந்த பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடம்பில் ரத்தஓட்டம்  சீராக இருக்கும். நரம்புகள் பலமாகும். நரம்புகள் சுருங்கி விரிவது சீராக்கப்படுகிறது.
 • அதுமட்டுமில்லாமல் வயிற்று பிரச்சனை குணமாகும்.
 • இதனால் கல்லீரல் சீராக செயல்பட்டு உணவு செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரக்கப்படுகிறது.
 • அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் மனஅழுத்தம் கட்டுப்படுகிறது.
 • இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதில் இருக்கக்கூடிய மூல பொருட்கள் இருதய சுவர்களுக்கு நல்ல பலத்தினை கொடுக்கிறது.
 • வயிற்றில் புழுக்கள் இருந்தால் தினமும் காலையில் ஒரு பூண்டு பச்சையாக சாப்பிட்டு வர குடலிலுள்ள புழுக்கள் வெளியேறுகிறது.
 • இதனால் சுவாச பிரச்சனைகள் குணமாகிறது. ஆஸ்துமா, காசநோய்,நிமோனியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்

பூண்டைப் பற்றிய ஊட்டசத்து நிபுணர்களின் கருத்து:

இந்த பூண்டு பற்களை நீங்கள் தேனில் ஊறவைத்து கூட சாப்பிட்டு வரலாம். அப்படி இல்லையென்றால் 10 நாட்கள் தோலுரித்த பூண்டை தேனில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பூண்டை உட்கொள்வதால் வாந்தி, வாயு, நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பூண்டு சாப்பிடுவதை நிறுத்தவேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

புற்றுநோயை தடுக்கிறது:

Garlic side efferts

வறுத்த பூண்டு சாப்பிடுவதன் மூலம் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. காரணம், இதில் அலில் சல்பேடு என்ற பொருள் உள்ள காரணத்தால் இது புற்றுநோய் எதிர்ப்பாக செயல்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்  வருவதற்கு காரணமாக இருப்பது, PHIP என்ற ஒரு வகை ஹைட்ரோசெபிக் அமின். பூண்டில் உள்ள டயாலில் சல்பைடு தான் PHIVI கார்சினோஜென்ஸ் ஆக மாற்றுகின்றது.

அளவுக்கு அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

சிலருக்கு பூண்டு வாசனையே பிடிக்காது. ஆனால் சிலரோ பூண்டு வாசனை இல்லாமல் எந்த ஓரு உணவையும் சுவைக்கமாட்டார்கள். பூண்டு எல்லா நோய்களையும் குணப்படுத்த கூடியது. ஆனாலும் உலகில் எல்லாவற்றிலும் நல்லது கெட்டது என்று இரண்டு பக்கங்கள் உண்டு. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று கூறுவார்கள். அதுபோலத்தான் இந்த பூண்டையும் அளவோடு பயன்படுத்தவேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil