இதயத்தை பாதுகாக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்

heart health

இதயத்தை பாதுகாக்க:

மனித உடல்களில் மிக முக்கியமான ஒன்று எதுவென்றால், அதுதான் இதயம் அதுவும் மனித இன்ஜினாக விளங்குகிறது. இத்தகையை இதயத்தை பாதுகாக்க (heart health) வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறிப்பாக நாம் ரெடிமேட் உணவுகள், மைதாவில் செய்யப்பட உணவுகள் அதிகளவு உட்கொள்வதினால் இதயத்திற்கு அதிகளவு தீங்கு விளைவிக்கின்றோம்.

எனவே இதயத்தை பாதுகாக்க கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு உண்டு வர இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும். குறிப்பாக காலை உணவாக கடினமான உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து கொண்டு, பழங்களை அதிகளவு சாப்பிட்டு வந்தால் இதயத்தை (heart health) ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.

சரி வாங்க இந்த பகுதில் இதயத்தை பாதுகாக்க கூடிய பழங்களை பற்றி இப்போது நாம் காண்போம்.

மாதுளை பழம்:

மாதுளை

ஒரு மாதுளை பழத்தை எடுத்து கொள்ளவும் அவற்றில் இருக்கும் தோல்களை நீக்கிவிட்டு, மிக்சியில் பசும் பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றை வடிகட்டி கொண்டு தினமும் ஒரு கிளாஸ் அருந்தி வரவும். இவ்வாறு செய்வதினால் இதயத்தை ஆரோக்கியமாக பாதுக்காக்க முடியும்.

திராட்சை:

தேவையான அளவு திராட்சையை வாங்கி கொள்ளவும். பின்பு அவற்றை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும், பிறகு வெந்நீரில் வேகவைத்து கொள்ளவும்.

பின்பு இவற்றை மிக்சியில் அரைத்து அவற்றில் இருக்கும் சாறை வடிகட்டி கொள்ளவும், அதனுடன் சம அளவு புதினாவையும் அரைத்து சாறை வடிகட்டி இரண்டையும் ஒன்றாக கலந்து தினமும் ஒரு கிளாஸ் குடித்து வர இதயத்தில் ஏற்படும் படபடப்பு சரியாகும்.

ஆரஞ்சு பழம்:

இதயத்தை பாதுகாக்க கூடிய அற்புத பழமாக விளங்குகிறது இந்த ஆரஞ்சு பழம். இந்த பழம் நமக்கு மிக எளிதாகவே கிடைக்க கூடிய ஒன்று தான். எனவே தினமும் அதிகளவு ஆரஞ்சு பழத்தை உண்டு வர இதயத்தை பாதுகாக்கலாம்.

ஆப்பிள்:

ஆப்பிளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதயத்தில் இருக்கும் தமணிகளை பாதுகாப்பதோடு, கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர இதயத்தை (heart health) ஆரோக்கியமா பாதுகாக்கலாம்.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இருப்பினும் வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியமும், மெக்னீசியமும் இதயத்தில் ஏற்படும் இரத்த கொதிப்பை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.

அதுமட்டும் இன்றி வாழைப்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மற்றும் விட்டமின் C இரண்டும் இதயத்தில் ஏற்படும் படபடப்பை சரி செய்கிறது.

கிவி பழம்:

கிவி பழம் இதயத்தை பாதுகாக்க அதிகளவு உதவுகிறது, குறிப்பாக கிவி பழத்தில் இருக்கும் விட்டமின் E, விட்டமின் C, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.

குறிப்பாக விட்டமின் C நம் உடலில் இருக்கும் கொழுப்பை குறைப்பதற்கு அதிகளவு உதவுகிறது, எனவே இதயத்தை பாதுக்காக்க (heart health) கிவி பழத்தை தினமும் அதிகளவு சாப்பிட்டு வரலாம்.

பப்பாளி:

தினமும் அன்றாட உணவில் அதிகளவு பப்பாளியை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

குறிப்பாக பப்பாளியில் இருக்கும் விட்டமின் A, விட்டமின் C, விட்டமின் E, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் போலிட் சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.

குறிப்பாக பப்பாளியில் இருக்கும் போலிட் சத்து இதயத்தை (heart health) அதிகளவு பாதுகாக்க உதவுகிறது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE