வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குடல் இறக்கம் குணமாக பாட்டி வைத்தியம் | Hernia Treatment in Siddha in Tamil

Updated On: May 2, 2025 5:08 PM
Follow Us:
kudal irakkam treatment in tamil
---Advertisement---
Advertisement

ஹெர்னியா குணமாக என்ன செய்வது | Hernia Treatment in Siddha in Tamil

குடல் இறக்கம் என்னும் உடல்நிலை பாதிப்பு வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை. காய்ச்சல் போன்று நோய்களும் சர்வசாதாரணமாக அதிகரித்து வருவதும் அதனால் அறுவை சிகிச்சை நடைபெறுவதும் தற்போது அதிகமாகிவிட்டது. அதில் ஒன்று ஹெர்னியா. சரி இந்த குடல் இறக்கம் எதனால் ஏற்படுகிறது, அதன் காரணங்கள் மற்றும் பாட்டி வைத்தியம் குறிப்புகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

ஹெர்னியா (kudal irakkam) என்றால் என்ன?

ஹெர்னியா என்பது பொதுவாக உள்ள ஒரு வகை உடல் சார்ந்த பிரச்சனையாகும். இதனை குடல் இறக்கம் என்பார்கள்.

குடல் இறக்கம் காரணங்கள்:-

  1. உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தால் தசை நார்கள் விலக வாய்ப்புள்ளது.
  2. அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுதலும் இந்த பிரச்சனைக்கான அடிப்படை காரணமாகும்.
  3. பிரசவ நேரத்தில் பெண்கள், குழந்தை பெறுவதற்காக அதிக அளவு முக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவர். இதனாலே இவர்களில் ஒரு சிலருக்குப் பிற்காலத்தில் இந்த குடல் இறக்கம் பாதிப்பு ஏற்படலாம். இதுபோன்று பல காரணங்கள் உள்ளது.
  4. வளரும் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சரி இதை தடுக்கும் வழிகளை தெரிந்து கொள்வோம் வாங்க.

குடல் இறக்கம் அறிகுறிகள் | Kudal Irakkam Symptoms in Tamil:

ஹெர்னியா குணமாக என்ன செய்வது

  • குழந்தைகளுக்கு உண்டாகும் தொப்புள் சார்ந்த ஹெர்னியாவில் குழந்தை அழும் போது தொப்புள் பகுதியில் ஒரு வீக்கம் ஏற்படும்.
  • பெரியவர்களாஅக இருந்தால் தொப்புள் பகுதியில் வீக்கமும் இருமலும் சளி ஒழுகலும் உண்டாகும். வயிற்றை இழுத்துபிடிப்பது போன்ற உணர்வு உண்டாகும்.
  • அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களாக இருந்தால் தையல் போட்ட இடத்தில் அறுவை சிகிச்சைக்கு பிறகு குறுகிய காலத்தில் திரவம் வெளியேறுவதன் மூலம் குடலிறக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். இது வெகு குறைவானர்களுக்கு ஏற்படுகிறது.
  • சிலருக்கு வலி இல்லாமல் கட்டியாக தோன்றும். பிறகு அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதியில் கடுமையான வலி இருக்கும். அடிவயிறு இடுப்பு பகுதியில் வலி, மேல்புற வைய்ற்றில் வலி, உண்டாவதும் இதன் அறிகுறிகளில் ஒன்று.
  • இருமும் போதும், மலம் கழிக்க முக்கும் போதும் தசைபகுதியில் சிறிய வீக்கம் உண்டாகும். பெரும்பாலும் இதன் அறிகுறிகள் வலியற்ற வீக்கத்தோடு தான் இருக்கிறது.
  • சிலருக்கு நிற்கும் போதும், அதிக எடை கொண்ட பொருளை தூக்கும் போதும் மோசமாகிவிடும். வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக்குழாயில் சேர்வதால் நெஞ்செரிச்சல் உண்டாவது தொடர்ந்தாலும் அவையும் இதன் அறிகுறிகள்.

குடல் இறக்கம் பாட்டி வைத்தியம் (Kudal Irakkam Maruthuvam) – தடுக்கும் வழிகள்:

  1. தினமும் உடற்பயிற்சி செய்யலாம்.
  2. உயரத்திற்கு ஏற்ற அளவு உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
  3. தினமும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
  4. தினமும் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
  5. இரவு நேரங்களில் அளவோடு உணவருந்த வேண்டும்.
  6. உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.
  7. அதிக எடையுள்ள பொருட்களை தூக்க கூடாது.
  8. சைக்கிள், பைக் போன்றவற்றில் அதிக நேரம் பயணம் மேற்கொள்ள கூடாது.

குடல் இறக்கம் குணமாக பாட்டி வைத்தியம்:

ஹெர்னியா குணமாக மஞ்சள்:-

இந்த குடல் இறக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் பாலில் மஞ்சளை கலந்து பருகலாம். இவ்வாறு செய்வதினால் நல்ல நிவாரணம் அளிக்கும்.

குடல் இறக்கம் பாட்டி வைத்தியம் இஞ்சி:-

சமையலறையில் என்றும் இருக்கக்கூடிய ஒரு பொருள் தான் இஞ்சி. மேலும் குடலிறக்கம் பிரச்சனையை சரி செய்ய பயன்படுகிறது. குடல் இறக்கம் மூலம் ஏற்பட்ட வலியை இஞ்சி குறைக்கும். எனவே குடலிறக்கம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இஞ்சி டீ அருந்தி வரலாம்.

குடலிறக்கம் இயற்கை வைத்தியம் மிளகு:-

மிளகு பல்வேறு விதமான வயிற்று சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. எனவே மிளகினை பாலில் கலந்து அல்லது உணவுகளில் சேர்த்து உட்கொள்வதன் மூலம் குடல் இறக்கம் (kudal irakkam maruthuvam) பிரச்சனை குணமாகும்.

குடலிறக்கம் வராமல் தடுக்க கற்றாழை:-

கற்றாழைக்குப் புண்களை ஆற்றும் தன்மை இயற்கையாக உள்ளது. கற்றாழையின் மேலே உள்ள தோல் பகுதியை நீக்கினால் உள்ளே வளவளப்பான பகுதி காணப்படும். இதனை எடுத்து சாறாக அரைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கற்றாழை சாறு அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஹெர்னியா பாதிப்பு குணம் அடையும்.

ஹெர்னியா குணமாக அதிமதுரம்:-

குடல் இறக்க நோய் (kudal irakkam maruthuvam) சரிசெய்ய அதிமதுரம் ஒரு சிறந்த மருந்து. நாட்டு மருந்துக் கடைகளில் அதிமதுரம் பொடியாக கிடைக்கும். இந்த பொடியைப் பாலில் கலந்து, வாரம் ஒரு முறை என்ற அளவில் அருந்த வேண்டும். இவ்வாறு அருந்துவதினால் குடல் இறக்கம் குணமாகும்.

குடல் இறக்கம் எப்படி கண்டுபிடிப்பது:

  • வயிற்று பகுதியில் வீக்கம் ஏற்ப்பட்டால் அவை குடல் இறக்கத்தின் அறிகுறியாக இருக்கிறது.
  • நடக்கும் போது தசைப்பிடிப்பு அல்லது மார்பு அல்லது எடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டால் அவை குடல் இறக்கத்தின் அறிகுறியாக இருக்கிறது.
  • தொப்புள் பகுதியில் வீக்கம் இருந்தாலோ அல்லது சிவப்பு நிறத்தில் இருந்தாலோ அவை குடலிறக்கம் என்று அறிந்து கொள்ளலாம்.
  • நடக்கும் போதும் அல்லது மாடிப்படி ஏறும் போதோ ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போல தெரிந்தால் அவை குடலிறக்கமாக இருக்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now