பாத எரிச்சல் பாட்டி வைத்தியம் | Home Remedies For Burning Feet in Tamil

Advertisement

கால் எரிச்சல் பாட்டி வைத்தியம் | Kaal Erichal Treatment in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆரோக்கியம் பகுதியில் பாத எரிச்சல் குணமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். கால்களில் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு பொதுவான காரணம் சர்க்கரை நோய் மற்றும் நரம்பு சேதம் தான். இதை தவிர வேறு சில காரணங்களாலும் பாதத்தில் எரிச்சல் உண்டாகிறது. இந்த எரிச்சலால் மக்கள் தீராத வேதனைக்கு உள்ளாகின்றனர். பாத எரிச்சலை குணப்படுத்துவதற்கு ஆங்கில மருந்துகளை விட, பாட்டி வைத்தியம் தான் மிகவும் சிறந்தது, அந்த வகையில் இந்த தொகுப்பில் பாத எரிச்சலை குணப்படுத்துவதற்கு பாட்டி சொல்லும் வைத்தியத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.

பாத எரிச்சல் காரணம்:

  • சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது உடலில் சார்பிட்டால் எனும் வேதிப்பொருள் உருவாகிறது. இந்த சார்பிட்டால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போது பாதத்தில் எரிச்சல் உண்டாகிறது.
  • பி வைட்டமின், ஃபோலிக் அமிலம், தையமின் அல்லது கால்சியம் குறைபாடுகள், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், புற வாஸ்குலர் நோய்கள் போன்றவற்றாலும் பாதங்களில் எரிச்சல் ஏற்படும்.

பாத எரிச்சல் பாட்டி வைத்தியம்

டிப்ஸ்: 1

Kaal Erichal Treatment in Tamil

தேவையான பொருட்கள்:

  1. மருதாணி இலை – தேவையான அளவு
  2. வெட்டி வேர் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
  3. அருகம்புல் சாறு – 1 கப்
  4. பன்னீர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • Foot Burning Home Remedies in Tamil: தேவையான அளவு மருதாணி இலையை எடுத்து அதனை சுத்தப்படுத்தி பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும். அரைத்த பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் வெட்டி வேர் பவுடர், பன்னீர் 2 டேபிள் ஸ்பூன், அருகம்புல் சாறு 1 கப் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
  • பின் இதை பாதத்தில் தடவி 1 மணி நேரம் ஊறவைத்து பின்னர் தண்ணீரில் கழுவி விடலாம். இதில் பயன்படுத்தபட்ட பொருட்கள் அனைத்தும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை, எனவே உங்களின் பாதங்களில் உள்ள எரிச்சல் அனைத்தும் விரைவில் குணமாக இது உதவியாக இருக்கும்.

டிப்ஸ்: 2

Home Remedies For Burning Feet in Tamil

தேவையான பொருட்கள்:

  1. மருதாணி இலை – தேவையான அளவு
  2. எலுமிச்சை சாறு – 1 கப்

செய்முறை:

  • பாத எரிச்சல் பாட்டி வைத்தியம்: மருதாணி இலையை அரைத்து கொள்ளவும், பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளவும்.
  • பின் இதை பாதத்தை நன்கு கழுவி விட்டு பூசி அரை மணி நேரம் காய வைக்கவும். அரை மணி நேரம் கழித்து கால்களை கழுவி விடலாம். இந்த செய்முறை மூலம் உங்கள் பாதங்களில் உள்ள எரிச்சல் உடனடியாக குணமாகும்.

டிப்ஸ்: 3

kaal erichal treatment in tamil

  • Padha Erichal Treatment in Tamil: தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கால்களை கழுவி கொள்ளவும். மஞ்சளில் உள்ள Antibiotic பண்புகள் கால்களில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறுவதற்கு உதவியாக இருக்கும்.
  • பின் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கால்களை ஊறவைத்து பின்னர் தூய்மையான நீரில் கழுவி கொள்ளவும். பின் காலை துடைத்து விட்டு தேங்காய் எண்ணெய் வைத்து பாதத்தை மசாஜ் செய்யவும். இதன் மூலம் உங்கள் கால்களில் உள்ள எரிச்சல் உடனடியாக குணமாகும்.
இரவு நேரங்களில் பாத எரிச்சல் அதிகமாக இருக்கின்றதா? அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் இதோ..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement