பித்தப்பை கல் கரைய என்ன செய்ய வேண்டும்?
Home Remedies for Gallstones in Tamil:- நம் உடலில் ஏற்படும் குறிப்பிட்ட நோய்களை அறிகுறிகளை வைத்து எளிதில் கண்டறிய முடியும். இருப்பினும் நம் உடலில் ஏற்படும் பலவிதமான ஆபத்தான நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது என்பது மிகவும் கடினமாகும். அத்தகைய நோய்கள் முற்றிய பின்புதான் கண்டறிய முடியும். அந்த வகையில் வயதானவர்கள் மற்றும் பெண்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் பித்தப்பை கற்கள். இந்த பிரச்சனை நமக்கு வலி ஏற்படுத்தும் வரை நம் உடலில் எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. இத்தகைய பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு.
நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்யும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை தான், அதாவது ஒருவேளை சாப்பிட்டு அடுத்தவேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்கு தேவையான பித்த நீரை சேமித்து வைக்கிறது. நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.
சரி இந்த பதிவில் பித்தப்பை கற்கள் எதனால் உருவாகிறது, பித்தப்பை கற்கள் அறிகுறிகள் என்னென்ன?, இதற்கு வீட்டு வைத்தியம் என்ன உள்ளது போன்ற தகவல்களை இங்கு அறியலாம் வாங்க.
பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்..! Home Remedies for Gallstones in Tamil..!
பித்தக்கற்கள் என்பது என்ன?
பித்தக்கற்கள் என்பது கடினமான பந்து போன்று பித்தப்பையில் உருவாகின்றது. இந்த பித்தக்கற்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் அல்லது பித்த உப்புக்களால் உருவாகும். இந்த கற்கள் சிறிய கற்கள் முதல் பெரிய அளவிலான டென்னிஸ் பந்து அளவு வரை, பல்வேறு அளவுகளில் உருவாகும். என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..! |
பித்தப்பை கற்கள் உருவாவது எப்படி?
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்பவர்கள், அதிகப்படியான மாத்திரை உட்கொள்பவர்கள், கருத்தடை மாத்திரைகளை அதிகளவு உபயோகப்படுத்துபவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும் இரத்தசிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்களுக்கு, இரத்த சோகை உள்ளவர்களுக்கு, செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகளில் பாதிப்பு உள்ளவர்களுக்கு, குடல் புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புற்று நோய் உள்ளவர்களுக்கு பித்தப்பை கற்கள் எளிதில் உருவாகும்.
பித்தப்பை கற்கள் அறிகுறிகள் – Gallbladder Stones Symptoms in Tamil:-
வலது நெஞ்சு வலி, தலை வலி, பின் முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாகும்.
வயிற்றில் மேல் பகுதியில் வலது புறத்தில் வலி கடுமையாக ஏற்படும்.
அதிகப்படியான உடல் எடை குறைவு.
காய்ச்சல், வாந்தி, சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுவது, வாயுத்தொல்லை, மஞ்சகாமாலை, பசியின்மை மற்றும் சாப்பிட்ட பிறகு செரிமான பிரச்சனை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் பித்தப்பையில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
தங்களுக்கு பித்தப்பை கல் இருப்பது உறுதியானால் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:-
அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை கட்டாயம் உட்கொள்ளக்கூடாது. மேலும் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து கொள்ளுதல் வேண்டும்.
பசித்தால் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
ஃப்ரிட்ஜியில் வைத்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
பரோட்டா, ஃபிரைட் ரைஸ், மக்ரோனி, நூடுல்ஸ் பீசா, பர்க்கர் போன்ற மைதா மாவில் செய்யும் உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களாக இருந்தால் இந்த உணவுகளை உட்கொள்வதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்.
மேலும் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் தங்களுக்கு இருக்கிறது என்றால் கட்டாயமாக தவிர்த்து கொள்ளுதல் வேண்டும்.
தைராய்டு அறிகுறிகள் என்னென்ன? |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |