ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்
நீண்ட நாட்களுக்கு நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்தான உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது. அதில் ஒன்று தான் நட்ஸ் வகைகள். நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அளவுக்கு அதிகமாக நட்ஸ் வகைகளை எடுத்து கொள்கிறார்கள். மாதிரி எடுத்த கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதனால் ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளவும்.
நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நட்ஸ் நமது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது மாறும் சத்துக்களும் நிறைந்துள்ளது. கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் புரோட்டீன் போன்றவை நிறைந்துள்ளது.
கொழுப்புகளை குறைக்க:
நட்ஸில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்க பயன்படுகிறது. மேலும் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.
மாரடைப்பு வருவதை தடுக்க:
நட்ஸில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பிரச்சனையிலுருந்து தடுக்கிறது. இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
வெறும் வயிற்றில் பாதாம் மற்றும் திராட்சையை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்
ஒவ்வொரு நட்ஸிலும் எவ்வளவு சாப்பிட வேண்டும்:
- பாதாம் – 4 முதல் 6
- வால்நட் – 3 முதல் 5
- பேரீட்சைப்பழம் – 2
- பிஸ்தா – 10 கிராம்
- உலர் திராட்சை – 10
- முந்திரி – 5- 7
- அப்ரிகாட் – 3- 5
- உலர் அத்தி – 2
Side Effects Eating Too Many Nuts
எடை அதிகரிப்பு:
நட்ஸில் நன்மைகள் அதிகமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடலிற்கு தீங்கினை விளைவிக்கிறது. நட்ஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடல் எடையை அதிகரிக்க செய்கின்றது.
செரிமான பிரச்சனை:
நீங்கள் அதிகமாக நட்ஸ் சாப்பிட்ட பிறகு வாயு, வீக்கம் மற்றும் செரிமான பிரச்சனையை உணர்ந்திருக்கலாம். நட்ஸில் பைட்டேட்ஸ் மற்றும் டானின்கள் போன்ற கலவைகள் சேர்ப்பதால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
நச்சுத்தன்மை:
சில நட்ஸ்களில் செலினியம் நிறைந்துள்ளது. அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சுவாச பிரச்சனை, மூச்சுத்திணறல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பாதாம் VS வேர்க்கடலை இரண்டில் எது சிறந்தது..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |