இந்த 5 ஜூஸ் குடித்தால் போதும் கல்லீரல் சுத்தமாகும் | Liver Cleanse Juice Benefits in Tamil

Liver Cleanse Juice Benefits in Tamil

கல்லீரல் சுத்தம் செய்வது எப்படி..?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் கல்லீரல் சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஜூஸ் வகைகளை பற்றி பார்க்க போகிறோம். அனைவருக்கும் செய்யக்கூடிய தவறு என்னவென்றால்..? உடல் வடிவமைப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக நவீன உணவு முறைகளை பின் பற்றி வருவார்கள் ஆனால் அதனால் பெரிய இழப்புகளை அடைவீர்கள். இது போல் தொடர்ந்து பின்பற்றி வந்தால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல் தான். நம் உடலுக்கு  முக்கியமான ஒன்று என்றால் அது கல்லீரலை தான் சொல்வோம். அவ்வாறு கூறுவதை போல் அதனை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நம் கடமையாகும். அந்த வகையில் இன்று கல்லீரல் சுத்தம் செய்ய என்ன சாப்பிடவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..!

பீட்ரூட் ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள்:

பீட்ரூட் ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள்

  • பீட்ருட் என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று சமையல் செய்வதற்கு தேவைப்படும் காய் என்று. இதனை சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மை உள்ளது என்று யோசித்துருப்பீர்கள்.
  • இதனை தினமும் உணவுகளில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அது மட்டுமில்லாமல் பீட்ருட்டை ஜூஸ் செய்து குடித்தால் கல்லீரலுக்கு நன்மை கிடைக்கும். இந்த ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் வீக்கத்திலிருந்து கல்லீரலை பாதுகாக்கும். இது உடலுக்கு தேவையில்லாத நச்சுத்தன்மைகளை சேரவிடாமல் விரட்டும்.

இலை ஜூஸ்:

இலை ஜூஸ்

  • இலை ஜூஸ் என்றால் எதை சாப்பிடவேண்டும் என்று யோசிப்பீர்கள். இலை என்றால் பழங்களில் இலைகளை ஜூஸ் செய்து குடிக்கலாம். பழங்கள் நமக்கு எவ்வளவு நன்மைகளை தருகிறதோ அந்த அளவிற்கு நன்மையை தரும்.
  • முக்கியமாக பீட்ரூட், ஆப்பிள், வெள்ளரிக்காய், எலுமிச்சை, சில பழங்களில் இலைகளை ஜூஸ் செய்து குடித்தால் கல்லீரல் சுத்தமாகும். அதுமட்டுமில்லாமல் உணவுகளில் கீரை வகைகளை சேர்த்து கொள்ளுங்கள் ஏனென்றால் கீரைகளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பைபர் நிறைந்திருக்கும் அதனால் உடலில் ஏற்படும் சர்ம பிரச்சனைலிருந்து பாதுகாக்கும்.

இஞ்சி லெமன் ஜூஸ்:

இஞ்சி லெமன் ஜூஸ்

  • அனைவரும் விருப்பி அருந்த கூடியது  பிரெஷ் ஆரஞ்சு ஜூஸ் தான். அப்படி குடிக்கும் போது  அதில் கொஞ்சம் இஞ்சி சேர்த்து குடிப்பதால் உடலுக்கு நன்மையை அளிக்கும். அதுமட்டுமில்லாமல் கல்லீரலை சுத்தம் செய்யும் அதனை பலப்படுத்தவும் உதவும்.

காய்கறி ஜூஸ் வகைகள்:

காய்கறி ஜூஸ் வகைகள்

அன்றாடம் உணவுகளில் சேர்க்ககூடிய காய்கறிகளை ஜூஸ் செய்து குடிக்கலாம். உணவுகளிலும் சேர்த்து சாப்பிட்டு தான் வருகிறோம் பிறகு எதற்கு ஜூஸ் குடிக்க வேண்டும் என்று அனைவரும் யோசிக்கலாம். காய்கறி பழங்கள் என்றால் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தனித்தன்மைகளை கொண்டது. அதனால் தான் தினமும் பழங்களில் அல்லது காய்கறிகளில் ஜூஸ் செய்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil