உங்கள் பாதங்களை பராமரிப்பதற்கு சில டிப்ஸ்..!

பாதங்களை பாதுகாக்க

பாதங்களைப் பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்ல, அது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் தான். பொதுவாக நாம் கால்களை பராமரிப்பதற்கு அதிக நேரம் செலவழிப்பதில்லை குளிக்கும் போது தேய்த்து கழுவுவதோடு சரி அதன் பின் கவனிப்பதில்லை இதனால் கால்களில் அழுக்கு சேர்ந்து சில பிரச்சனைகள் வர நாமே வழி வகுக்கின்றோம். பாதங்களை பாதுகாக்க இந்த டிப்ஸ் மிகவும்  உதவும்.

சரிவாங்க இவற்றில் பாதங்களை பராமரிக்க என்னென்ன டிப்ஸ் உள்ளது என்று நாம் காண்போம்.

பாதங்களை பாதுகாக்க சில டிப்ஸ்..!

டிப்ஸ் 1:

பாதங்களை சரியாக கழுவுங்கள் தினமும் வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை ஒழுங்காக சுத்தம் செய்ய வேண்டும்.

அவ்வாறு சுத்தம் செய்யும் போது தரமான கிருமிநாசினி சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

டிப்ஸ் 2:

ஒரு பங்கு வினிகருடன் இரண்டு பங்கு நீரைச் சேர்த்து நன்றாக சுத்தம் செய்வதன் மூலம் பாதங்களில் ஏற்படும் பாக்டீரியா பாதிப்புகளை பெருமளவில் குறைக்கலாம்.

டிப்ஸ் 3:

எப்பொழுதும் அசுத்தமான, வியர்வை மிகுந்த காலுறைகளைத் தவிர்த்து விடுங்கள்.

டிப்ஸ் 4:

பாதங்களை பராமரிப்பதற்காக சரியான சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உங்கள் டயட் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் 5:

புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம் போன்றவற்றை குறைப்பதன் மூலம் உங்கள் பாதங்கள் எளிதில் சோர்வடையாமல் தவிர்க்கலாம்.

டிப்ஸ் 6:

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பவுடர்கள்,ஸ்பேரேக்கள் போன்றவற்றை சரியாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

டிப்ஸ் 7:

பாதங்களிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை போக்குவதற்கென்றே உள்ள மூலிகைகளைப் பயன்படுத்துங்கள்.

டிப்ஸ் 8:

பாதங்களை பாதுகாக்க 4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீர் நிரம்பியுள்ள வாளியில் சேர்த்து கலந்து, அதில் சிறிது ஷாம்பு சேர்த்து கலந்து, அந்த கலவையில் கால்களை 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இப்படி செய்து வந்தாலும், கால்களில் உள்ள கருமை மறைந்து, கால்கள் பொலிவோடு இருக்கும்.

டிப்ஸ் 9:

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும்.

இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE