கர்ப்பத்தின் போது கால் வீக்கம் குறைய என்ன செய்யலாம்?
kal veekam during pregnancy in tamil / கர்ப்பிணி கால் வீக்கம்: பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாக கர்ப்பத்தின் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இந்த பிரச்சனையை நாம் எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
கர்ப்பிணி பெண்கள் கால் வீக்கம் குறைய
கர்ப்பத்தின் போது கால் வீக்கம் குறைய – தொடர்ச்சியாக நிற்க கூடாது:-
கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக நிற்கும் பொழுது இரத்த ஓட்டம் சரியானபடி இருக்காது. அதனால் கால் வீக்கம் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் நெடுநேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
வெயிலில் செல்ல வேண்டாம்:-
கர்ப்பிணி பெண்கள் பொதுவாக அதிக வெயில் அடிக்கும் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளவும்.
கால்களை உயர்த்தி வையுங்கள்:-
கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் மூன்று நான்கு வேளைகளில் 15 நிமிடம் என்ற நேர அளவில் கால்களைத் தலையணைக்கு மேலே உயர்த்தி வைக்கலாம். இது ஒரு எளிமையான மற்றும் சிறந்த வழி. இதனால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால் வீக்கம் குறையும்.
கர்ப்பத்தின் போது கால் வீக்கம் குறைய – சிறந்த காலணிகள்:-
சற்று மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிவது சிறந்தது. கடுமையான ரக செருப்புகள் மற்றும் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை முற்றிலுமாகக் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பத்தின் போது கால் வீக்கம் குறைய – நீச்சல்:-
கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் குறைய நீச்சல் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி. நீச்சல் அடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.
நீச்சல் பயிற்சி முறைப்படி கற்றறிந்த கர்ப்பிணிப் பெண்கள் நீச்சல் அடிக்கலாம். இதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்து கொள்ளலாம்.
அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..? |
Home Remedies for Swollen Feet During Pregnancy – தண்ணீர்:-
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் போதிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்வது அவசியம்.
இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகள் நீங்கும். கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் குறைவதுடன், கால் வீக்கம் வடிய வாய்ப்பு உள்ளது.
ஈரத்துணியை கொண்டும் அல்லது ஐஸ் கட்டி (Ice pack) கொண்டு நன்கு ஒத்தரம் கொடுக்கலாம்.
கர்ப்பத்தின் போது கால் வீக்கம் குறைய – உப்பின் அளவு:-
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் உப்பின் அளவை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் உணவில் அதிகபட்சமான உப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு கட்டுப்பாடான அளவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணிப் பெண்களின் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். இதன் விளைவாக அவர்களின் கால் வீக்கம் குறையும்.
உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS |
கர்ப்ப காலத்தில் கால் வலி – பொட்டாசியம்:-
கர்ப்பிணிப் பெண்களின் உடலில் அதிக அளவு ஊட்டச் சத்து தேவைப்படும். எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவும் அறிவும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம்.
ஊட்டச்சத்து பொட்டாசியத்தை போதிய அளவிற்கு உடலில் கிடைக்கச் செய்வதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்யலாம். வாழைப்பழம், அவகேடோ அத்திப்பழம், லீட்டாஸ், செலரி, கிவி போன்ற பழங்களில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.
தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலும் இந்த சத்து நிறைந்துள்ளது. கீரை வகையான புதினாவிலும் பொட்டாசியம் உள்ளது.
சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |